
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ஜனவரி 9 ஆம் தேதி, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான திரைப்படம், 'தர்பார்'. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி இருந்த இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தது லைக்கா நிறுவனம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மும்பை போலீஸ் கமிஷ்னர் ஆதித்ய அருணாச்சலமாக நடித்திருந்த இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படம் வெளியாகி தொடந்து கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் நான்கு நாள் வசூல் விவரம் குறித்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
முதல் நான்கு நாட்களில் தர்பார் திரைப்படம் மொத்தம் ரூ.128 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் நான்கு நாட்களில், ரூ.7 . 2 கோடி வசூலித்துள்ளதாகவும், தமிழகத்தில் ரூ.44.6 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் கேரளாவில் ரூ.7.2 கோடி, கர்நாடகாவில் ரூ.11 கோடி, ஆந்திராவில் ரூ.12 கோடி, வட இந்தியாவில் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த படம் ரூ.14 கோடியும், ஐரோப்பாவில் ரூ.7 கோடியும், வளைகுடா நாடுகளில் ரூ.11 கோடியும், ஆஸ்திரேலியாவில் ரூ.4 கோடியும் சிங்கப்பூரில் ரூ.5 கோடியும், மலேசியாவில் ரூ.6 கோடியும் வசூல் செய்துள்ளதாம்.
மேலும் செய்திகளுக்கு: ஓவர் லிப்ஸ்டிக் போட்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்த லாஸ்லியா
எனவே... தற்போது 'தர்பாரில் வசூல், 100 கோடியை கடந்துள்ளது என கூறலாம். 'தர்பார்' படத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும் அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, நான்கு நாளில் 100 கோடி வசூலை எட்டி விட்டார், தலைவர் என ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.