
நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா, அவரது இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள படம் "தபாங் 3". சோனாக்ஷி சின்ஹா, சுதிப், டிம்பிள் கபாடியா, அனுபம் கெர் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 2010 மற்றும் 2012ம் ஆண்டில் வெளியான தபாங் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் சூப்பர் ஹிட்டடித்தது. இதனைத் தொடர்ந்து தபாங் 3 படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
தபாங் 3 படத்தை டிசம்பர் மாதம் 20ம் தேதி திரையிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்காக போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் புயல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ஒவ்வொன்றாக தற்போது யூ-டியூப்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று சல்மான்கான், சோனாக்ஷி சின்ஹா ஒன்றாக கலக்கும் ரொமாண்டிக் சாங் வெளியிடப்பட்டது. யு கார்க்கே என்ற அந்தப் பாடலை ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டுரசித்துள்ளனர்.
ரசிகர்களை துள்ளாட்டம் போட வைக்கும் அந்த பாடலில் சல்மான் கான், சோனாக்ஷி சின்ஹா ஜோடியின் ரொமான்ஸ் செம்ம ஹிட்டாகியுள்ளது. அதுவும் அந்த பாடலில் பச்சை, ஊதா, ஆரஞ்சு என வண்ண, வண்ண புடவைகளில் நடனமாடி சோனாக்ஷி சின்ஹா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.
இந்நிலையில் அந்த பாடலில் கலர் கலர் புடவைகளில் நடனமாடிய சோனாக்ஷி சின்ஹா, அதே புடவைகளில் கலக்கல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். வண்ண, வண்ண புடவைகளில் வானவில்லாய் காட்சியளிக்கும் சோனாக்ஷி சின்ஹாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.