Coolie : அனிருத் மற்றும் சாண்டியின் Fun புரோமோ உடன் வெளிவந்த கூலி படத்தின் அப்டேட்

Published : Jun 23, 2025, 06:33 PM IST
Coolie

சுருக்கம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது.

Coolie First Single Update : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் கன்னட நடிகர் உபேந்திரா, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, மலையாள நடிகர் செளபின் சாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுதவிர தமிழ் சினிமா பிரபலங்களான சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோரும் கூலி படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தேவா என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜும், ரஜினிகாந்தும் முதன்முறையாக இணைந்துள்ள படம் இது என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஒரு குத்துப் பாடலை பாடி இருக்கிறார். சிக்கிட்டு என தொடங்கும் அப்பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்பகனவே வெளியாகி இணையத்தில் படு வைரலானது. இந்த நிலையில், அந்த பாடலின் முழு வெர்ஷனையும் பர்ஸ்ட் சிங்கிளாக வெளியிட உள்ளனர். இதனை கடந்த வாரமே ரிலீஸ் செய்ய இருந்தனர். ஆனால் சில காரணங்களுக்காக அந்த பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் இந்த வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

கூலி பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

கூலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சிக்கிட்டு வைப் பாடல் வரிகளை அறிவு எழுதி உள்ளார். இப்பாடல் வருகிற ஜூன் 25-ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காக ஒரு குட்டி புரோமோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் மாஸாக ரெட் கலர் மஹிந்திரா எலெக்ட்ரிக் காரில் வந்து இறங்கிய அனிருத், தோளில் சங்கிலியை போட்டுக்கொண்டு கெத்தாக கூலி ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார்.

 

 

அங்கு அனிருத்தை பார்த்து ஷாக் ஆன நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், அனிருத்திடம் இருந்து அந்த சங்கிலியை வாங்கிக் கொண்டு, இந்த பாடலுக்கு தேவையானது இதுதான் என சொல்லி கர்சிப் ஒன்றை கொடுக்கிறார். அதன்பின்னர் கூலி பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பை அதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த புரோமோ வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. தங்கக் கடத்தலை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரீ-ரிலீஸுக்கு ரெடியான ரஜினிகாந்தின் பக்கா மாஸ் படம் ‘படையப்பா’... எப்போ வெளியாகிறது தெரியுமா?
அங்கம்மாள் திரைப்படம் சூப்பரா? சுமாரா? விமர்சனம் இதோ