
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் பல பிரச்சனைகளுக்கு அஸ்தீவாராம் போட்ட கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் தொடர்கிறது. இதனை கமல் கூட, ஞாயிற்று கிழமை பேசும் போது தெரிவித்திருந்தார். முதலில் கால் சென்டர் ஊழியர்களாக இருந்த அனைவரும், தற்போது காலராக மாறுகிறார்கள். காலராக இருந்தவர்கள் கால் சென்டர் ஊழியர்களாக மாறுகிறார்கள் இது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
முதல் காலராக பாலாஜி, ஆரியை தேர்வு செய்து தன்னுடைய கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்புகிறார். ஆரி போன் கால் எடுத்தவுடன் ’நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகர். ஆனால் வீட்டிற்கு வெளியே’ என்று குதர்க்கமாக ஆரம்பிக்கும் பாலாஜி, ‘நான் யாரையும் காலி பண்ணி விளையாட மாட்டேன், எல்லோரும் ஒன்றாக சேர்ந்து விளையாடுவோம் என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள்.
ஆனால் ஆரி நீங்கள் யாரும் யாரையும் காலி பண்ணி விளையாட வேண்டும் என நினைக்கவில்லையா? என்று முதல் கேள்வியை கேட்கிறார். அதன்பிறகு ’நான் கெட்டவன் என்று சொல்பவனை கூட நம்புவேன், நான் நல்லவன் என்று சொல்பவனை கூட நம்பலாம், ஆனால் நான் மட்டும் தான் நல்லவன் என்று சொல்றான் பாருங்க அவனை மட்டும் நம்பவே முடியாது’ என்று பாலாஜி கேள்வியை முன் வைக்கிறார்.
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிரித்தபடியே மழுப்பும் ஆரி, வழக்கம் போல்... பாலாஜிக்கு சரியான பதிலடி கொடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.