
தமிழ் சினிமாவில் ஆயிரத்து 1949 ஆம் ஆண்டு வெளியான 'ஔவையார்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பிரபல காமெடி நடிகர் ஓமகுச்சி நரசிம்மன். சென்னை எல்ஐசியில் பணிபுரிந்த இவர், தன்னுடைய வேளையில் கவனம் செலுத்திக்கொண்டே, திரையுலகிலும் நடித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய தென்னிந்திய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தமிழில் வெளியான 'திருக்கல்யாணம்', ' சகலகலா வல்லவன்', 'சூரியன்', 'மீண்டும் கோகிலா' உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலம்.
மேலும் 'இந்தியன் சம்மர்' என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஓமகுச்சி என பெயர் வரவும் ஒரு காரணம் உள்ளது. பிரபல நாடக இயக்குனர் தில்லை ராஜன் 'நாரதரும் நான்கு திருடர்களும்' என்ற நாடகத்தில் நரசிம்மன் கராத்தே பயில்வானாக நடித்தார். நகைச்சுவையாக அமைய வேண்டும் என்பதற்காக பிரபல கராத்தே வீரர் யாமகுச்சியின் பெயரை நாடகத்தின் கேரக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமகுச்சி என்று வைத்தால் நகைச்சுவையாக இருக்கும் என்று நினைத்து அப்பெயரை வைத்தனர்.
இந்த நாடகத்திற்கு மக்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்ததால் நூறு நாட்கள் வரை நடந்தது. அதில் இருந்து நரசிம்மனை ஓமக்குச்சி நரசிம்மன் என பலரும் இவரை அழைக்க துவங்கி, அதுவே இவருடைய பெயராகவும் அமைந்து விட்டது.
இவருக்கு சரஸ்வதி என்கிற மனைவியும் ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த இவர், 2009ஆம் ஆண்டு மரணமடைந்தார். இந்நிலையில் இவருடைய ஒரே மகன் சாமியாராக மாறி உள்ள புகைப்படம் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சித்தர்கள், சாய்பாபா, இயேசு உள்ளிட்ட கடவுள்களை நேரில் சந்தித்து இருக்கிறேன் எனக் கூறிக்கொண்டு, ஆன்மீகத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு தற்போது திருவல்லிக்கேணியிலுள்ள காமேஸ்வர சுவாமி என்ற பெயரில் வசித்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.