’பேத்தி வயதுப் பெண்களே ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்’...பாடல்காட்சியிலும் ரஜினியை வச்சு செய்யும் ‘கோமாளி’...இதோ வீடியோ...

Published : Aug 06, 2019, 06:17 PM IST
’பேத்தி வயதுப் பெண்களே ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்கள்’...பாடல்காட்சியிலும் ரஜினியை வச்சு செய்யும் ‘கோமாளி’...இதோ வீடியோ...

சுருக்கம்

ரஜினியை அரசியல் கோமாளியாகச் சித்தரித்த ‘கோமாளி’பட சர்ச்சையே இன்னும் ஒரு முடிவுக்கு வராத அதே படக்குழு ரஜினியின் வயதைக் கிண்டலடித்து ஒரு 15 செகண்ட் பாடல் ஒன்றை வெளியிட்டு ரஜினியையும் அவரது ரசிகர்களையும் மீண்டும் வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.

ரஜினியை அரசியல் கோமாளியாகச் சித்தரித்த ‘கோமாளி’பட சர்ச்சையே இன்னும் ஒரு முடிவுக்கு வராத அதே படக்குழு ரஜினியின் வயதைக் கிண்டலடித்து ஒரு 15 செகண்ட் பாடல் ஒன்றை வெளியிட்டு ரஜினியையும் அவரது ரசிகர்களையும் மீண்டும் வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,சம்யுக்தா, யோகி பாபு மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கும் படம் ‘கோமாளி’.இதில் ஜெயம் ரவி ஆதிகால மனிதன் துவங்கி பல்வேறு கெட் அப்களில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் கடந்த 3ம் தேதி  இப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. அதில் ஒரு காட்சியில் கோமா ஸ்டேஜில் இருந்து 16 வருடங்களுக்குப் பிறகு  எழும் ஜெயம் ரவி யோகிபாபுவிடம் ‘இது எந்த வருஷம் என்று கேட்க அவர் 2017 என்று கூறி ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாகப் பேசும் டி.வி காட்சி ஒன்றைக் காட்டுகிறார். உடனே அதையே காரணமாக வைத்து ‘இது 1996. நான் நம்ப மாட்டேன்’என்பார். அதாவது 96லிருந்து 2017 வரை தனது அரசியல் அறிவிப்பில் இருந்து எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்று நக்கலடித்திருந்தார்கள்.

அதற்கு கிடைத்த கண்டனங்களால் ட்ரெயிலரில் இருந்த ரஜினி காட்சிகள் நீக்கப்பட தற்போது மீண்டும் ஒரு பாடலை வெளியிட்டு ரஜினியின் வயதை பங்கம் செய்திருக்கிறார்கள். அந்தப் பாடல் வரிகளில் ‘சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம் பாட்டி ஆயிடுச்சே.இப்ப பேத்தி எல்லாம் வளர்ந்து வந்து ஜோடி சேர்ந்திருச்சே’என்று அவரது வயதையும் பேத்தி வயதுப்  பெண்கள் அவருக்கு ஜோடியாக நடிப்பதையும் கிண்டல் அடித்திருக்கிறார்கள். இது ரஜினி ரசிகர்களை மேலும் எரிச்சலாக்கியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!