நயன்தாராவின் அந்த லக்கி டிரைவர்... சூடேற்றவைக்கும் அமலா பால்!! சக்கைபோடு போட்ட சர்கார்!

Published : Dec 06, 2018, 10:44 AM IST
நயன்தாராவின் அந்த லக்கி டிரைவர்... சூடேற்றவைக்கும் அமலா பால்!! சக்கைபோடு போட்ட சர்கார்!

சுருக்கம்

நயன்தாராவின் ஜாகுவார் காருக்கு அந்த லக்கி டிரைவர் இவர்தான் ... பல சுவையான சினிமா செய்திகள்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முன்னணி நடிகர்களை வீழ்த்தி சம்பள விஷயத்தில் முந்தியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘பி.எம்.டபிள்யூ’ கார் வைத்திருந்தார். இப்போது புதிதாக, ‘ஜாகுவார்’ கார் வாங்கியிருக்கிறார். விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கும் நடிகைகள் பட்டியலில், நயன்தாரா பெயரும் இடம் பெற்றுள்ளது.

சென்னை நகருக்குள் அவர், ‘ஜாகுவார்’ காரை பயன்படுத்துகிறார். வெளியூர் படப்பிடிப்புகளுக்கு ‘பி.எம்.டபிள்யூ’ காரை பயன்படுத்துகிறார். வெளியூர்களுக்கு செல்லும்போது, அவருடைய காதலர் விக்னேஷ் சிவனே கார் ஓட்டுகிறாராம்!

அமலாபால், அவருடைய சம்பளத்தை திடீர் என்று உயர்த்தி இருக்கிறார். இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி கேட்கிறார். விளம்பர படத்துக்கும் அவர் இதே சம்பளத்தை கேட்கிறாராம், அமலாவின் சம்பலவிஷயத்தைக் கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் சூடேறிப்போய் கிடக்கிறார்களாம்.

பல சர்ச்சைகளுக்கு நடுவில்  வெளியான சர்க்கார் வசூல் சாதனை செய்திருப்பதாக வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். இந்த படம், உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.125 கோடியும், சென்னையில் மட்டும் ரூ.15 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்!
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?
நாட்டாமை டீச்சரின் மகளா இது? அம்மாவை தொடர்ந்து சரத்குமாருடன் நடித்த மகள்: ரசிகர்கள் அதிர்ச்சி!