Cobra movie : உதயநிதி வசம் சென்ற ‘கோப்ரா’... வெளியீட்டு உரிமையை தட்டித்தூக்கியது ரெட் ஜெயண்ட்

By Asianet Tamil cinema  |  First Published Jun 28, 2022, 7:32 AM IST

Cobra movie : கோப்ரா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


சியான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக கேஜிஎஃப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஹாலிவுட்டிலும் கொடிகட்டி பறக்கும் இளையராஜா புகழ்..ஆங்கில படத்திலும் இசைஞானி!

Tap to resize

Latest Videos

இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு வில்லனாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்துள்ளார். இப்படம் மூலம் அவர் கோலிவுட்டில் நடிகராக அறிமுகமாக உள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் இதுவரை வெளியான தும்பி துள்ளல் மற்றும் அதீரா ஆகிய இரு பாடல் ஹிட் ஆகின.

இதையும் படியுங்கள்... பிரபல வில்லன் மர்ம மரணம்..தூக்கில் தொங்கிய உடல் மீட்பு!

கோப்ரா திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பல்வேறு கெட் அப்களில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாகும் என அண்மையில் அறிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... மூத்த தமிழ் நடிகரும், தெரு நாடகக் கலைஞருமான 'பூ' ராமு காலமானார்

pic.twitter.com/LTRdgJ5Jnp

— Udhay (@Udhaystalin)

இந்நிலையில், அப்படம் குறித்து மேலும் ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி கோப்ரா படத்தின் வெளியீட்டு உரிமை உதயநிதி வசம் சென்றுள்ளது. அவரின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கோப்ரா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

click me!