
பழம் பெரும் கன்னட நடிகர் சக்தி பிரசாத்தின் பேரனும், ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரி மகனுமான (மருமகன்) கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாரடைப்பு காரணமாக ஜூன் 7 ஆம் தேதி உயிரிழந்தார். 39 வயதே ஆன சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் ஒட்டு மொத்த கன்னட திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.
2009ம் ஆண்டு வயுபுத்ரா என்ற கன்னட படம் மூலம் அறிமுகமான சிரஞ்சீவி சார்ஜா, இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவரது கைவசம் 3 படங்கள் உள்ளன. கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.
இவர் கிட்ட தட்ட 10 வருடங்களாக நடிகை மேக்னா ராஜை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2018ம் ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிரஞ்சீவி சார்ஜாவிற்கு, 7 ஆம் தேதி அன்று மூச்சு திணறல் ஏற்படுவதற்கு... இரண்டு நாட்களுக்கு முன்பே, லேசான நெஞ்சுவலி இருந்துள்ளது. வாயு பிரச்சனையாக இருக்கும் என அதனை அவர் பெரிதாக கண்டு கொள்ளாமல், முதலுதவி சிகிச்சை மட்டும் எடுத்து கொண்டு அலட்சியப்படுத்திவிட்டார். அதே போல் இவருடைய குடும்பத்தினரும் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் திடீர் என மூச்சு திணறல் ஏற்படவே தான் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மாரடைப்பால் உயிரிழந்தார் என மருத்துவர்களை தெரிவித்தனர்.
ஒருவேளை, இரண்டு தினங்களுக்கு முன், லேசான நெஞ்சுவலி ஏற்பட்ட போதே... சிரஞ்சீவி சார்ஜா மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை மேற்கொண்டிருந்தால், 4 மாதம் கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு சென்றிருக்க மாட்டார். இதனை நினைத்து நினைத்து தற்போது இவருடைய குடும்பத்தினர் குமுறி வருகிறார்கள். காதல் மனைவி மேக்னா திருமணம் ஆகி இரண்டு வருடத்திற்கு பின் கர்ப்பமாகி இருந்ததால், அவருடைய ஒவ்வொரு வேலைகளையும் பார்த்து பார்த்து செய்து வந்த சிரஞ்சீவி... இரண்டு நாட்களுக்கு முன்பே காட்டிய அறிகுறியை அலட்சிய படுத்தியதால்... மீளவே முடியாத பெரும் வலியை தந்து சென்றுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.