வைரமுத்துவை சும்மா விடமாட்டேன்…. வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து புகார் அளிக்க ரெடி!! சின்மயி அதிரடி !!

By Selvanayagam PFirst Published Oct 12, 2018, 9:10 PM IST
Highlights

தனக்கு  பாலியல் தொந்தரவு கொடுத்தது குறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து கவிஞர் வைரமுத்து மீது புகார் அளிக்கப்படும் என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’ என, பாதிக்கப்பட்ட ஒரு பெண் பத்திரிக்கையாளர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததுதான் தற்போது தமிழகத்தல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தன்னிடமும் வைரமுத்து பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அவர் பற்றி எல்லாருக்கும் தெரியும்; நிறைய பாடகிகள் இதை அறிவார்கள். அவர் இப்படித்தான்; என்கிற பொருள்பட கருத்துப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் பற்றிக் கொண்டது.

மேலும் அவர் 2004-ல் ஸ்விட்சர்லாந்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக `வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் வெளியீட்டு விழா நடந்தது. விழா முடிந்ததும் மற்ற அனைவரையும் அனுப்பிவிட்டு, என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்கச் சொன்னார்கள்.

பிறகு, வைரமுத்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு என்னை மட்டும் அழைத்தார்கள். அழைத்தவர்களின் வார்த்தைகளே நோக்கத்தைக் காட்டியதால் நான் மறுத்துவிட்டேன். பிறகு, அதற்காக மிரட்டும் தொனியிலும் வார்த்தைகளை எதிர்கொண்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஸ்விட்சர்லாந்தில் நடந்த நிகழ்ச்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சுரேஷ் என்பவர் மறுத்திருக்கிறார். அந்த சுரேஷ் வைரமுத்துவுக்கு நெருக்கமான நண்பர்; வைரமுத்துவின் விருப்பத்தின் பெயரிலேயே அந்த நிகழ்ச்சிக்கு சின்மயி அழைக்கப்பட்டார் என்றும் தகவல்கள் பரவின.

சின்மயி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து, அண்மைக்காலமாக பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறுவது நாகரீகமாகிவிட்டது என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வைரமுத்து மீது சின்மயி புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பெங்களுரிலிருந்து இன்று இரவு 7.30 மணி விமானத்தில் சென்னை வந்த சின்மயி செய்தியாளர்களிடம் பேசும்போது கவிஞர் வைரமுத்துவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உண்மை தான் என்றும் இது அவருக்கே தெரியும் என்றும்   வைரமுத்துவால் மறுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

அடுத்தகட்டமாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன் என்றும் சின்மயி  தெரிவித்தார்.

புகார் தொடர்பாக எந்த ஆதரமும் இல்லை என்றும் இது போன்ற பாலியல் கொடுமைக்கு ஆதாரம் கேட்பது நியாமற்ற செயல் என்றும் இது போன்று பல்வேறு சம்பவங்கள் ஏற்கனவே நடைபெற்றுள்ள நிலையில் அவர்கள் சார்பாக தான் , நான் முதலில் குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

click me!