கொரோனா தாக்கியபின் ஏற்பட்ட பிரச்சனை..! வலது காலை இழந்த பிரபல நடிகர்!

By manimegalai aFirst Published Apr 21, 2020, 4:12 PM IST
Highlights

பிரபல நடிகர், கொரோன தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த போது, ஏற்கப்பட்ட ஒரு சில பிரச்சனை காரணமாக, அவருடைய வலது கால் நீக்கப்பட்டு விட்டதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.
 

பிரபல நடிகர், கொரோன தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்த போது, ஏற்கப்பட்ட ஒரு சில பிரச்சனை காரணமாக, அவருடைய வலது கால் நீக்கப்பட்டு விட்டதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார்.

சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் உலகத்தின் 210 நாடுகளுக்கு பரவி, கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதுவரையில் 24 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தி சிகிச்சையில் இருக்கும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 170,435 ஆக அதிகரித்திருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் மேலும், மேலும் அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கையும் அதிகமாகும் என்றே கூறப்படுகிறது. குறிப்பாக கொரோனா பல  மூத்த ஹாலிவுட் பிரபலங்களை பலி வாங்கி விட்டது.

அந்த வகையில், Broadway பட நடிகர் நிக் கோர்டேரோ, மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், உடனடியாக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, மருத்துவர்கள் தனிமை படுத்தி சிகிச்சையளித்து வந்தனர்.

இந்நிலையில், இவருக்கு கொரோனா சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போது, திடீர் என வலது காலில் ரத்த ஓட்டம் பாதித்தது. ஆங்காங்கு ரத்தம் தடை பட்டத்துடன், காலின் உள்ளேயே ரத்த கசிவும் ஏற்பட்டது. இதனால், கொரோனா சிகிச்சையை மருத்துவர்கள் உடனடியாக நிறுத்தினர்.

இவருடைய உடல் நிலை, மோசமாவதை தடுக்க, வலது காலை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், வேறு வழியின்றி அவருடைய வலது கால் நீக்கப்பட்டு, தற்போது நிக் நல்லபடியாக உடல் நலம் தேறி வருவதாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார். இந்த விஷயம் இவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!