எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளுங்கள்...! ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!

Published : Jan 18, 2021, 11:11 AM ISTUpdated : Jan 18, 2021, 12:04 PM IST
எந்த கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளுங்கள்...! ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!

சுருக்கம்

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் 31 ஆம் தேதி தன்னுடைய அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய உடல் நிலை காரணமாக கட்சி துவங்க வில்லை என்பதை அதிகார பூர்வமாக அறிவித்து ரசிகர்களுக்கும், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இதை தொடர்ந்து தற்போது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர், ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இம்முறை கண்டிப்பாக ரஜினிகாந்த் அரசியல் கட்சி குறித்து அறிவித்து, வருகிற சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்வார் என இவரது பல்லாயிர கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் திடீர் என, 'அண்ணாத்த' படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டபோது, பல்வேறு பாதுகாப்புகளுக்கு மத்தியிலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்த போது நெகடிவ் என வந்தாலும், திடீர் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நிலை உருவானது. தற்போது மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி ரஜினிகாந்த் முழு ஓய்வில் இருந்து வருகிறார்.

அதே நேரத்தில் ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடி, தலைவர் அரசியல் குறித்து எடுத்த முடிவை மாற்றி கொள்ளவேண்டும் என சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டபோதும், சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு இனி வரப்போவது இல்லை என்பதில் உறுதியாக உள்ளார்.

அவர் அரசியல் கட்சி துவங்கவில்லை என்றாலும், ஏதானும் அரசியல் கட்சிக்கு தன்னுடைய ஆதரவை தருவார் என பல அரசியல் கட்சியினர் எதிர்பார்த்த நிலையில், தற்போது அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. 'ரஜினி மக்கள் மன்றம் ' நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, "ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்துகொள்ளலாம்.

அவர்கள் வேறு எந்த கட்சியில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்பு தலைவரின் ரசிகர்கள் தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது".

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?
பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!