
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பரில் 5 தேதி மரணமடைந்தார் அவர் இறப்பிற்கு பின் அவரை பற்றிய பல அறிய தகவல்கள் இன்னும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இவர் 1999 ம் வருடம் ஒரு தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியை கண்டிப்பாக பலர் பார்த்திருக்க கூடும். இந்த பேட்டியை எடுத்தவர் மும்பையை சேர்ந்த சிமி கரேவால்.
இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் மேலும் ஒரு நடிகையாகவும் , தயாரிப்பாளராகவும் , இயக்குனராகவும் என பாலிவுட்டில் மிக பிரபலமானவர்.
அந்த பேட்டியை எடுத்ததற்கு இவரை பாராட்டி ஜெயலலிதா அனுப்பிய கடிதத்தை தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் நடிகை சிமி.
அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளது நீங்கள் நேர்காணல் செய்து டிவியில் ஒளிபரப்பிய நிகழ்ச்சியை நான் நிஜமாகவே விரும்புகிறேன் என்றும் .
இதை பார்த்த பலரும் எனக்கு தங்களது கருத்துக்களை அனுப்பினார்கள். என்னை நேர்காணல் செய்த பல நிகழ்ச்சிகளில் இது மிக சிறப்பானது என பலரும் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நேர்காணலின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்து . உங்கள் திறமையை பாராட்டுகிறேன்என கூறியுள்ளார். ஒரு பிரபலத்துடன் இருந்து சரியான முறையில் பேட்டி கண்டுள்ளீர்கள் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நான் அப்போது பாடிய ஹிந்தி பாடலை டிவியில் பார்த்து ரசித்தேன் என கடிதத்தில் ஜெயலலிதா 18 வருடங்களுக்கு முன் நடந்த இந்நிகழ்வை சிமி இப்போது வெளியிட்டுள்ளார். அவர் ஜெயலலிதாவிடம் இருந்து கடிதம் வந்தது எனக்கு மிகவும் ஆச்சர்யத்தை ஏற்பத்தியுள்ளதாக தெரிவித்து கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.