நயன்தாரா கட்டழகில் மயங்கிய பாலிவுட் ஹிரோயின்கள்...!! பரந்த மனசுக்காரி என பாராட்டு..!!

Published : Oct 23, 2019, 12:48 PM ISTUpdated : Oct 23, 2019, 01:28 PM IST
நயன்தாரா கட்டழகில் மயங்கிய பாலிவுட் ஹிரோயின்கள்...!! பரந்த மனசுக்காரி என பாராட்டு..!!

சுருக்கம்

நயன்தாரா மிகவும் தாராள மனதுடையவர், உங்களுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் நயன்தாரா குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சாய்னா நேவால் நயன்தாரா கே பியூட்டி வீடியோவில் அழகு தேவதையாக  மிளிர்கிறார் என பதிவிட்டுள்ளார் 

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா அழகு தேவதையாக மிளிர்கிறார் என பாலிவுட் முன்னணி நடிகை கேத்ரினா கைப் மற்றும் பேட்மிட்டன் வீராங்களை சாய்னா நேவால் ஆகியோர் சமூகவலைதளத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.  இது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பாலிவுட் திரையுலகின் மிகப் பிரபலமான முன்னணி நடிகையக உள்ளார் கேத்ரினா கைப், இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு  தன்னுடைய பிராண்ட்மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்யும் வீடியோ சூட் நடைபெற்றது,  கே பியூட்டி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அந்த விளம்பரத்தில் கேத்ரினா கைப்யுடன் பாலிவுட் முன்னணி நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். அதில் பேட்மிட்டன் வீராங்கனை  சாய்னா நேவாலும் அதில் நடித்துள்ளனர்.  அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

இந்த வீடியோவில் தமிழ் சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா கலந்து கொண்டு பட்டையை கிளப்பியுள்ளார்.  இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் நயன்தாராவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கேத்ரினா கைப் டுவிட்டரில்  தனது கருத்தை பதிவிட்டாள்ளார். அதில், தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நன்றி... இடைவிடாத பணிகளுக்கு  மத்தியிலும் கே பியூட்டி நிகழ்ச்சிக்காக மும்பைக்கு பறந்த வந்ததற்கு நன்றி... நயன்தாரா மிகவும் தாராள மனதுடையவர், உங்களுக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் நயன்தாரா குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சாய்னா நேவால் நயன்தாரா கே பியூட்டி வீடியோவில் அழகு தேவதையாக  மிளிர்கிறார் என பதிவிட்டுள்ளார் இது பாலிவுட்டில் நயன்தாரா சீக்கிரத்தில் இடம்பிடிப்பார் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வருகின்றனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மார்பிங் போட்டோ வெளியிட்டு மிரட்டியவர்களுக்கு சின்மயி கொடுத்த செருப்படி ரிப்ளை..!
விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்