"300 பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்"... கோபம் வர்ற மாதிரி காமெடி செய்த பாலிவுட் நடிகர்.... வெளுத்து வாங்கும் பிரபல நடிகை..!

Published : Dec 12, 2019, 04:04 PM ISTUpdated : Dec 12, 2019, 04:50 PM IST
"300 பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்"... கோபம் வர்ற மாதிரி காமெடி செய்த பாலிவுட் நடிகர்.... வெளுத்து வாங்கும் பிரபல நடிகை..!

சுருக்கம்

இந்தியில் நடைபெற்ற டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சஞ்சய் தத் நகைச்சுவைக்காக, "தான் 300 பெண்களுடன் உறவு கொண்டுள்ளதாக" கூறியுள்ளார். ஏற்கெனவே சினிமாவில் சர்ச்சையை கிளப்பிய வார்த்தைகளை, சஞ்சய் தத் நிஜத்திலும் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.   

1981ம் ஆண்டு "ராக்கி" என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் சஞ்சய் தத். 1993ம் ஆண்டு வெளியான "கல்நாயக்" என்ற திரைப்படம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்படத்தில் தீவிரவாதியாக நடித்த சஞ்சய் தத், அனுமதியின்றி ஏ.கே.56 ரக துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சம்பவம் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் 3 கான் நடிகர்களுக்கு போட்டியாக உச்சம் தொட்டிருப்பார். அப்படி காமெடியில் இருந்து ஆக்‌ஷன் வரை அனைத்து கதாபாத்திரங்களையும் கலக்கி எடுக்க கூடிய நடிகர். 

சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு "சஞ்சு" என்ற படம் வெளியானது. ரன்பீர் கபூர் நடித்திருந்த அந்த படத்தில், "இதுவரை 300 பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன்" என ஹீரோயினிடம் கூறுவது போல் ஒரு வசனம் வரும். அந்த வசனம் படம் ரிலீஸ் ஆன போதே பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இப்போது அந்த பிரச்னைக்கு தூபம் போட்டுள்ளார் சஞ்சய் தத். இந்தியில் நடைபெற்ற டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சஞ்சய் தத் நகைச்சுவைக்காக, "தான் 300 பெண்களுடன் உறவு கொண்டுள்ளதாக" கூறியுள்ளார். ஏற்கெனவே சினிமாவில் சர்ச்சையை கிளப்பிய வார்த்தைகளை, சஞ்சய் தத் நிஜத்திலும் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

சஞ்சய் தத்தின் கிண்டலான பேச்சால் கோபமடைந்த பாலிவுட் நடிகை ஒருவர் அவரை டுவிட்டர் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.  இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தீப்நீத்தா ஷர்மா, "பிரபல நடிகர் தான் இதுவரை 300 பெண்களுடன் உறவு வைத்துள்ளதாக கூறுகிறார். அதனை கேட்ட ரசிகர்கள் நல்ல நகைச்சுவை என சிரித்து மகிழ்கின்றனர். இந்த நகைச்சுவையை வேறு யாராவது ஒரு நடிகை கூறியிருந்தால் எல்லோரும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வீர்களா?, பாலியல் வன்கொடுமைகள் நடப்பதற்கு இதுபோன்ற செயல்களும் காரணம்" என சஞ்சய் தத்தை சகட்டு மேனிக்கு வறுத்தெடுத்துள்ளார்.

 

தீப்நீத்தா ஷர்மாவின் இந்த டுவிட்டர் பதிவிற்கு ஏராளமானோர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சிக்கு போன இடத்தில் சும்மா இல்லாமல், கோவம் வர்றா மாதிரி காமெடி பண்ணி மாட்டிக்கொண்டார் சர்ச்சை நாயகன் சஞ்சய் தத். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?