5 லட்சத்திற்கு ஆசைப்பட்டு 50 லட்சத்தை இழந்த பிக்பாஸ் கவின்...! ஆதரவாளர்கள் பெரும் அதிருப்தி..!

Published : Sep 26, 2019, 11:35 AM IST
5 லட்சத்திற்கு ஆசைப்பட்டு 50  லட்சத்தை இழந்த பிக்பாஸ் கவின்...! ஆதரவாளர்கள் பெரும்  அதிருப்தி..!

சுருக்கம்

உங்களில் யாராவது ஒருவர் வெளியேற விரும்பினால், ரூபாய் ஐந்து லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என பிக்பாஸ் தெரிவிக்கிறது. 

5 லட்சத்திற்கு ஆசைப்பட்டு 50  லட்சத்தை இழந்த பிக்பாஸ் கவின்...! ஆதரவாளர்கள் பெரும்  அதிருப்தி..! 

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் யார் டைட்டில் வின்னர் பெற போகிறார் ?என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பியிருக்கிறது. இதற்கிடையில் இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் யாரும் எதிர்பாராதவிதமாக கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதாவது உங்களில் யாராவது ஒருவர் வெளியேற விரும்பினால்,  ரூபாய் ஐந்து லட்சத்தை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என பிக்பாஸ் தெரிவிக்கிறது. இதற்கு மற்ற போட்டியாளர்கள் யாரும் முன்வராத நிலையில் முதல் ஆளாய் முந்திக்கொண்டு வெளியேற தான் தயார் என கவின் ரூபாய் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2ல் கலந்து கொண்ட மற்ற போட்டியாளர்களை விட பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்ட கவினுக்கு  தான் அதிக அளவில் மக்கள் ஆதரவு இருந்துள்ளது.இதன் மூலம் ரூபாய் 5 லட்சத்திற்கு ஆசைப்பட்டு 50 லட்சத்தை இழந்தது மட்டுமல்லாமல் டைட்டில் வின்னர் என்ற அங்கீகாரத்தையும் கவின் இழந்துள்ளார் என்றே சொல்லலாம். இந்த காட்சி இன்று ஒளி பரப்பப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

கவின் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை கவின் ஆதரவாளர்கள் சற்றும் ஏற்றுக்கொள்ளாத படி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் இத்தனை நாள் தாங்கள் ஆதரவு கொடுத்து வந்தது பயன் இல்லாமல் போயிற்று என்றும் பலர் புலம்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் வெளியேறியதால் பிக்பாஸ் டைட்டில் வின்னர் பெற வேறு யாருக்கு வாய்ப்பு உள்ளது என்று பார்க்கும்போது சாண்டி மாஸ்டர், தக்ஷன், முகேன் இவர்களில் ஒருவர் டைட்டில் வின்னர் ஆகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!