
கொரோனா தொற்று இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவிய வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும், இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்வதால், மக்கள் நாளுக்கு நாள் அச்சத்தில் உறைந்து வருகிறார்கள்.
இதுவரை இந்தியாவில் மட்டும் கொரோனாவால் பாதிப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. எனவே உலக அளவில் நான்காவது இடத்தில் இருந்து 3 ஆவது இடத்திற்கு நெருங்கும் அபாயத்தில் உள்ளது.
இதன் காரணமாக, ஊரடங்கு தற்போது அடுத்த மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தாக்கம் அதிகமாகும் பட்சத்தில், ஊரடங்கு மிகவும் கடுமையாக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபல நடிகையும், பாஜக கட்சியின் எம்.பியுமான லாக்கெட் சட்டர்ஜிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்க்கு வங்காள மாநிலம் ஹூக்ளி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டவர் நடிகை லாக்கெட் சாட்டர்ஜி . 45 வயதாகும் இவருக்கு கடந்த சில தினங்களாக லேசான காச்சல் இருந்ததால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், தனக்கு லேசான காய்ச்சல் இருந்தது, கடந்த ஒரு வாரமாக நான் என்னை தனிமை படுத்திக்கொண்டுள்ளேன். இப்பொது எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னிடம் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபப்ட்டுள்ளதாக, நடிகையும், எம்.பியுமான லாக்கெட் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
இவர் அரசியலில் களம் இறங்குவதைக்காக தன்னுடைய நடிப்புக்கு முழுமையாக முழுக்கு போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.