
தல அஜித்துடன் பல பைக் ரேஸிங் விளையாட்டுகளில் கலந்து கொண்டு கெத்து காட்டிய பெண்மணி, அலிஷா அப்துல்லா. சென்னையைச் சேர்ந்த இவர், கார் மற்றும் பைக் ரேஸ் சாம்பியன். தல அஜித்தின் தீவிர ரசிகையும் கூட. அலிஷா அப்துல்லாவின் தந்தை ஆர்.ஏ.அப்துல்லாவும் தல அஜித்துடன் பல பந்தயங்களில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: மீண்டும் கம்பேக் கொடுக்க தயாரான வடிவேலு..! 2 சூப்பர் டூப்பர் கேரக்டர்... இனி சிரிப்பு மழை தான்..!
அவ்வப்போது, சமூக வலைத்தளங்களில் அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படம், மற்றும் அவர் குறித்த தகவல்களையும் அலிஷா பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
பைக் ரேஸிங்கை தவிர, அலிஷா நடிகர் விஜய் ஆன்டனி நடித்த சைத்தான், மற்றும் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான 'இரும்பு குதிரை' ஆகிய படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: ஷங்கர், கே.எஸ்.ரவிக்குமார், வெற்றிமாறன்... என டாப் 10 இயக்குனர்கள் தங்களுடைய மனைவியுடன்..!
இந்நிலையில் இவருக்கு தமிழகத்தில் புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தேசிய மனித உரிமைகள் தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியகத்தின் தமிழக மாநில பெண்கள் தலைவராக அலிஷா அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அலுவலகத்தில்இருந்தபடி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதில் புதிய துவக்கம்... தேசிய மனித உரிமைகள் தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு பணியகத்தின் தமிழக மாநில பெண்கள் தலைவர் அலிஷா அப்துல்லா என பதிவிட்டுள்ளார். இதை கண்டு இவருடைய பணி சிறக்க அஜித்தின் ரசிகர்கள் மனமார வாழ்த்து கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.