வெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளப்பட்டியல்! அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் இவர் தான்!

Published : Jul 19, 2019, 06:12 PM ISTUpdated : Jul 19, 2019, 06:14 PM IST
வெளியானது பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளப்பட்டியல்! அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் இவர் தான்!

சுருக்கம்

விஜய் டிவியில் கடந்த 23ஆம் தேதி ஆரம்பமான, தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்கள் கடந்து கலகலப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  வனிதா விஜயகுமார் உள்ளே இருந்த போது சவுண்ட் பறந்த பிக்பாஸ் வீடு, இப்போது காதல் தோல்வியால் கலை இழந்து உள்ளது என்றே கூறலாம்.

விஜய் டிவியில் கடந்த 23ஆம் தேதி ஆரம்பமான, தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்று வாரங்கள் கடந்து கலகலப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  வனிதா விஜயகுமார் உள்ளே இருந்த போது சவுண்ட் பறந்த பிக்பாஸ் வீடு, இப்போது காதல் தோல்வியால் கலை இழந்து உள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளவர்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

அதன்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் பிரபல இயக்குனரான சேரனுக்கு, அதிகப்படியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 10 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மோகன் வைத்யா, சாண்டி, சரவணன், கவின், போன்றோருக்கு ஒரு நாளைக்கு 35  ஆயிரம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுவதாகவும், அபிராமி,  மதுமிதா, ரேஷ்மா, சாக்ஷி ஆகியோருக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் லாஸ்லியா, தர்ஷன், முகேன் போன்றவர்களுக்கு இந்த ஷோவில் உள்ளவரை மொத்தம் ஐந்து லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எப்போதும் பிரபலங்களின் சம்பள தகவல்கள் பற்றிய விவரங்களை பிக்பாஸ் குழுவினர் ரகசியமாக வைத்திருக்கும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவல் உறுதியான தகவலா என்பது தெரியவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!