மீன் மார்க்கெட், காவி வேட்டி... நெற்றியில் குங்குமம்.. கழுத்தில் சிலுவை... அகுலு பகுலு டகுலு வுட்ட பிகிலு பின்னணி...

Published : Jun 22, 2019, 11:21 AM ISTUpdated : Jun 22, 2019, 11:30 AM IST
மீன் மார்க்கெட், காவி வேட்டி... நெற்றியில் குங்குமம்.. கழுத்தில் சிலுவை...  அகுலு பகுலு டகுலு வுட்ட  பிகிலு பின்னணி...

சுருக்கம்

விஜய்யின் 63ஆவது படத்தின் தலைப்பு ‘பிகில்’ என வெளியாகியுள்ளது. விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. , ஜெர்சி அணிந்தபடி ஃபுட்பாலுடன் ஸ்டைலாக தோற்றமளிக்கும் விஜய்யும், மீன் மார்க்கெட் பின்னணியில் கறி வெட்டும் நபராக இருக்கையில் மற்றொரு விஜய்யும் அமர்ந்திருக்கும் இடம் பெற்றுள்ளனர். 

விஜய்யின் 63ஆவது படத்தின் தலைப்பு ‘பிகில்’ என வெளியாகியுள்ளது. விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. , ஜெர்சி அணிந்தபடி ஃபுட்பாலுடன் ஸ்டைலாக தோற்றமளிக்கும் விஜய்யும், மீன் மார்க்கெட் பின்னணியில்  மற்றொரு விஜய்யும் அமர்ந்திருக்கும் இடம் பெற்றுள்ளனர். 

விஜய் நடித்து வரும் 63-வது படத்துக்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். தெறி, மெர்சல் மீண்டும் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில், கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.  இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  இதுவரை, இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே ‘தளபதி 63’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தின் தலைப்பை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.  இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் தலைப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவருடைய பிறந்தநாளையொட்டி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதையொட்டி  படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய்யின் 63-வது படத்துக்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விசில் என்பதை லோக்கலா பிகில் என்று சொல்லலாம். 

படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில், இரு வேடங்களில் விஜய், கால்பந்தாட்ட வீரர் உடையில் யூத் விஜய், இன்னொரு விஜய் மீன் சந்தையில், கருப்பு சட்டை - காவி வேட்டி அணிந்து நாற்காலியில் மிரட்டலான லுக்கில் கம்பீரமாக உட்கார்ந்துள்ளார். அவருக்கு முன்னால் கறி வெட்ட பயன்படுத்தும் ஒரு மரக்கட்டை, அதன் மீது கறி வெட்டும் கத்தி உள்ளது.  பிகில் என தலைப்பையும், விஜய் கெட்டப்பையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 11:30 க்கு இப்படத்தின் 2 ஆம் லுக் போஸ்டர் வெளியானது அதில்; மைக்கேல் என்ற பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சி அணிந்தபடி நிற்கும் கால்பந்தாட்ட வீரர் விஜய், கையில் கத்தி, கழுத்தில் சிலுவை, நெற்றியில் திருநீறு, குங்குமம் என ரெளத்ரமாக நிற்கும் மற்றொரு விஜய், கோட்சூட்டில் ஒரு விஜய் என 4 பேர் நின்றுகொண்டிருக்கும், 2வது லுக் உள்ளது. இன்று நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் என்பதால் அவர் ரசிகர்கள் படப்போஸ்டர்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே 50 ஆயிரம் லைக்ஸ்களை அள்ளியது. 25 ஆயிரம் பேர் வரை ஷேர் செய்துள்ளனர்.  

சர்ச்சையை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தில், மீன் மார்க்கெட்டில், காவி வேட்டி கட்டிக்கொண்டு, நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு, சம்பந்தமே இல்லாமல்  கழுத்தில் சிலுவை போட்டு வெறித்தனமான லுக் ஏன் என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பொறுமையை சோதிக்கப்போகிறாரா விஜய்...? ஜன நாயகன் ரன் டைம் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
டிஸ்சார்ஜ் ஆகும் ஈஸ்வரி... களத்தில் இறங்கி சம்பவம் செய்ய தயாராகும் அறிவுக்கரசி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்