சேட்டன்களை அடித்து தூக்கிய 'பிகில்'... கேரளாவில் வசூலை வாரிக்குவித்து அதிரடி...!

Published : Oct 26, 2019, 05:34 PM ISTUpdated : Oct 26, 2019, 05:36 PM IST
சேட்டன்களை அடித்து தூக்கிய 'பிகில்'... கேரளாவில் வசூலை வாரிக்குவித்து அதிரடி...!

சுருக்கம்

அதிக எதிர்பார்ப்பு மற்றும் பிரம்மாண்ட வரவேற்புடன் கேரளாவில் வெளியிடப்பட்ட 'பிகில்', அங்கு ஒரே நாளில் ரூ.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.   

சேட்டன்களை அடித்து தூக்கிய 'பிகில்'... கேரளாவில் வசூலை வாரிக்குவித்து அதிரடி...!

விஜய்யின் படங்களுக்கு கேரளாவில் எப்போதும் மவுசு அதிகம். அதனால் தான் கேரளா தளபதியின் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. நேற்று உலகம்  முழுவதும் வெளியான 'பிகில்' திரைப்படம், கேரளாவிலும் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டது. தமிழக ரசிகர்கள் விஜய்யின் பேச்சுக்கு கட்டுப்பட்டு பேனர்கள் வைக்காமல், அந்தப் பணத்தில் ஏழை, எளியோருக்கு உதவிகள் செய்தார்கள். என்றாலும், இந்த முறை மாஸ் காட்டியது என்னமோ கேரள ரசிகர்கள் தான், 'பிகில்' திரைப்படத்தில் வரும் ராயப்பன் விஜய்க்கு சிலை வைத்து தெறிக்கவிட்டனர். 

முதலில் 'பிகில்' படத்தை வாங்க கேரள விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை என்ற தகவல் வெளியான நிலையில், நடிகர் பிருத்விராஜ் 'பிகில்' படத்தை வாங்கி, கேரளாவில் திரையிட்டார். தமிழகத்தைப் போல, கேரளாவிலும் வசூல் வேட்டையாடிய பிகில் திரைப்படம், மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதிக எதிர்பார்ப்பு மற்றும் பிரம்மாண்ட வரவேற்புடன் கேரளாவில் வெளியிடப்பட்ட 'பிகில்', அங்கு ஒரே நாளில் ரூ.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

மலையாளத்தில் கொடிகட்டி பறக்கும் முன்னணி ரசிகர்களின் படங்கள் ரூ.4 கோடி கூட வசூல் செய்ய முடியாமல் திணறி வரும் நிலையில், கேரளாவில் விஜய்யின் 'பிகில்' படம் வெறித்தனமான வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தொடர்ந்து 'மெர்சல்', 'சர்கார்', 'பிகில்' என விஜய்யின் அனைத்துபடங்களும் ஒரே நாளில் 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றன. இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் செம குஷியா இருக்காங்க. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dada Ganguly : கங்குலியாக மாறி சட்டையைக் கழற்றிய ராஜ்குமார் ராவ்! தாதா படத்தின் மிரட்டல் லுக்!
MGR : ஜெயலலிதா தான் வில்லி... எம்ஜிஆரின் பிடிவாதத்தால் பிளாப் ஆன படம்... பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த ரகசியம்!