
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில்', படத்தின் இசைவெளியீட்டு விழா, குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகி, சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் மூன்றாவது முறையாக அட்லீயுடன் இணைந்துள்ள திரைப்படம் பிகில். ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த, 'தெறி' , 'மெர்சல்', ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் விஜய் ரசிகர்கள், இந்த படத்திற்காக செம்ம வைட்டிங்கில் உள்ளனர்.
மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் விதத்தில், ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான விஜய் பாடியுள்ள 'வெறித்தனம்....' பாடல் மற்றும் 'சிங்க பெண்ணே' ஆகிய பாடல்களுக்கு, மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு குறித்த தகவல்களும் எந்த இடத்தில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, செப்டம்பர் 19ஆம் தேதி, "தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லூரியில்" நடத்த படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான். குறிப்பாக முதல்முறையாக நடிகர் விஜய் 'பிகில்' படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெறிதனம் என்கிற பாடல்களை பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு வெளியான, வெறித்தனம் பாடல் லிரிக்கல் வீடியோ... ஒரு வாரத்திற்குள்ளேயே, ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றும், 12 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. இதனை இந்த படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த படத்திற்காக விஜய் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர், யோகி பாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, உள்ளிட்ட ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.