
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை போட்டியாளர்களுக்குள் காதல் மலர்வது குறித்து எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக, லைட்டாக காதல் பற்றுவது போல் உள்ள ஒரு புரோமோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார் பிக்பாஸ்.
இன்றைய முதல் புரோமோவில், ஷிவானியை பல போட்டியாளர்கள் சுவாரஸ்யம் மற்றும் ஈடுபாடு இல்லாமல் விளையாடி வருகிறார் என கூறி கண்ணாடி ரூமிற்குள் அடைத்த போது, அவருக்காக பாலா பரிந்து பேசுவது போல் புரோமோ வெளியானது, எனவே இவர்கள் இடையில் காதல் தீ பற்ற வாய்ப்பிருப்பதாகவே மக்கள் கருதினர்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள புரோமோ, புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில், கேப்ரில்லா கிச்சனில் பாத்திரம் விளக்கி கொண்டிருக்கும் போது அங்கு வரும், பாலா... கிண்டலாக பேசுவதும், அதற்க்கு கேப்ரில்லாவும் பதில் பேசிவிட்டு, பின்னர் இருவரும் அடித்து பிடித்து விளையாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
பின்னல் "யாரோ... யாருக்குள் இங்கு யாரோ... பாடலும் ஓடிக்கொண்டிருக்கிறது. கேப்ரில்லா - ஆஜித் காதலிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், இவர்களுக்கு இடையே நின்று, வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் ஆஜித். வரும் நாட்களில் என்னென்னா நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.