
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் கவின், தனக்கு மிகவும் நெருக்கமான பிரபலத்தின் மறைவுக்கு, அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
2020ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தமிழ் திரையுலகின் திறமையான நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் என பலரையும் அடுத்தடுத்து இழந்து வருவது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையே உலுக்கியது. மற்றொருபுறம் கொரோனா லாக்டவுனால் திரையுலகம் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இதனால் எப்போது புது வருடம் பிறக்கும் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2020ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மற்றொரு கோலிவுட் நடிகரின் மறைவு அனைவரையும் பெருஞ்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி டப்பிங் கலைஞராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் அருண் அலெக்ஸாண்டர் (48). சென்னையைச் சேர்ந்த அருண் அலெக்ஸாண்டர் கடந்த 10 வருடங்களாக சினிமாவில் டப்பிங் கலைஞராக பணியாற்றி வருகிறார்.
மாநகரம், கோலமாவு கோகிலா, பிகில், கைதி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று அருண் அலெக்ஸாண்டர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவருடைய மரணம் திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய வைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் பிரபலமும், நடிகருமான கவின் தன்னுடைய சமூக வலைத்தளத்தில், அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு... 'வாழ்க்கை ஏன் இவ்வளவு கொடுமையாக இருக்கிறது என தெரியவில்லை. உங்களின் மறைவுக்கு இந்த போட்டோவை போஸ்ட் செய்வேன் என நினைக்கவில்லை. நீங்கள் நல்ல மனிதர். உங்களை மிஸ் செய்கிறோம்' பதிவிட்டு குமுறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.