பரிசுகளை அள்ளி கொடுத்த பிக்பாஸ்... தூக்க முடியாமல் தூக்கி சென்ற போட்டியாளர்கள்..!

Published : Dec 25, 2020, 04:17 PM IST
பரிசுகளை அள்ளி கொடுத்த பிக்பாஸ்... தூக்க முடியாமல் தூக்கி சென்ற போட்டியாளர்கள்..!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட படுவதால், போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசுகளை பிக்பாஸ் கிள்ளி அல்ல அள்ளி கொடுகொடுத்துள்ளார்.  

பிக்பாஸ் வீட்டில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட படுவதால், போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசுகளை பிக்பாஸ் கிள்ளி அல்ல அள்ளி கொடுகொடுத்துள்ளார்.

இன்று வெளியான முதல் புரோமோவிலேயே, போட்டியாளர்கள் அனைவரும்... பிக்பாஸ் வீட்டில் மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸ் பரிசுகளை பரிமாறி கொண்டும்,  கேக் வெட்டும் ப்ரோமோ வெளியானது.

யார் எது சொன்னாலும், எது செய்தாலும் மூஞ்சியை உம்முனு வைத்திருக்கும் அனிதா இந்த கொண்டாட்ட ஏற்பாடுகளை பார்த்து உச்சிகுளிர்ந்த சந்தோஷத்தில் இருந்தார். எங்கு பார்த்தாலும் மின்னும் வண்ண மின் விளக்குகள், ஸ்டார், கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் என பிக்பாஸ் வீடு கொண்டாட்ட களமாக மாறியுள்ளது. 

மேலும் போட்டியாளர்களை கூடுதல் சந்தோஷமாக்க பாடல்களும் ஒருகுழுவினர் பிக்பாஸ் வீட்டிற்கு விசிட் அடித்து பாடியுள்ளனர் என்பதை பார்த்தோம். இதைத்தொடர்ந்து வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில், பிக்பாஸ் பரிசுகளை கொடுப்பதற்காக அனைத்து போட்டியாளர்களிடமும் ஒரு கேள்வியை கேட்கிறார்.

இதற்க்கு சரியான பதில் சொல்லுபவர்கள் பரிசுகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று எவ்வளவு பரிசுகளை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். ஷிவானி, ஆஜித், ரியோ, ஆரி என பரிசுகளை எடுத்து சென்றது மட்டும் இன்றி, அதனை ஒருவருக்கொருவர் பரிமாறியும் உள்ளனர்.

இதுகுறித்த புரோமோ இதோ... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!