ஓவியாவின் மனதை மட்டுமல்ல... தமிழக மக்களின் மனதையும் கவர்ந்தார்..! பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்..!

 
Published : Oct 01, 2017, 08:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
ஓவியாவின் மனதை மட்டுமல்ல... தமிழக மக்களின் மனதையும் கவர்ந்தார்..! பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்..!

சுருக்கம்

bigg boss title winner arav

ஓவியாவின் மனதை கவர்ந்த ஆரவ், மக்களின் மனதையும் கவர்ந்து பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ளார்.  50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பிக்பாஸ் போட்டியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். 

100 நாட்களை பிக்பாஸ் வீட்டில் வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களில் மக்களின் மனங்கவர்ந்தவருக்கு பிக்பாஸ் டைட்டில் வழங்கப்படும் என்பதை அறிந்து 19 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர்.

ஆனால் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேற இறுதியாக 4 போட்டியாளர்கள் மட்டும் 100-வது நாளில் வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

கணேஷ், ஹரீஷ், சினேகன், ஆரவ் ஆகிய நால்வரும் 100வது நாள் வரை இருந்தனர். இதையடுத்து இவர்களில் யார் பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. 

கணேஷும் ஹரீஷும் வெளியேற்றப்பட ஆரவுக்கும் சினேகனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் சினேகனை விட அதிகமான ரசிகர்களின் வாக்குகளைப் பெற்று ஆரவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஓவியாவின் மனதை கவர்ந்த ஆரவ், தமிழக மக்களின் மனதையும் கவர்ந்துள்ளார் என்பது அவர் பிக்பாஸ் டைட்டிலை வென்றதன் மூலம் உறுதியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது மக்களிடம் அறிமுகமில்லாத நபர்களில் ஒருவராக வந்தவர் ஆரவ்.

ஆனால் 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்து மக்களின் பேராதரவுடன் பிக்பாஸ் போட்டியில் வென்றுள்ளார் ஆரவ்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!