பிக்பாஸின் நாக் அவுட்! 2 பேரை காலி பண்ண உள்ளே வரும் EX போட்டியாளர்கள் - எதிர்பாராத ட்விஸ்ட்!

By manimegalai a  |  First Published Jan 6, 2025, 12:56 PM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பைனலை எட்ட உள்ள நிலையில், போட்டியாளர்கள் யாரும் எதிர்பார்க்காத டாஸ்கை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பிக்பாஸ். இதுகுறித்த புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
 


கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே மூலம், முதல் பைனலிஸ்ட்டை தேர்வு செய்வதற்காக பல கடினமான போட்டிகள் வைத்த பிக் பாஸ், தற்போது டாப் 8 போட்டியாளராக இருப்பவர்களில், இருவரை வெளியே அனுப்ப புதிய பிளான் போட்டுள்ளார். அது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை, எந்த ஒரு விதிமுறையும் பிக்பாஸ் நியமிப்பது மட்டுமே. அவர் நினைத்தால் எந்த விஷயங்களையும் மாற்றி அமைக்க முடியும். எந்த நேரத்திலும் உரிய காரணத்தோடு போட்டியாளர்களை வெளியே அனுப்பும் உரிமையும் அவருக்கு உண்டு. ஏற்கனவே இது போல் சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதே இதற்க்கு மிகப்பெரிய உதாரணம்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் மூலம் வைல்ட் கார்டு சுற்று மூலம் 24 ஆவது போட்டியாளராக உள்ளே வந்த, ராயன் முதல் பைனல் லிஸ்டாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு அடுத்ததாக பைனலிஸ்ட்டாக மாற உள்ள போட்டியாளர் யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ஒருபுறம் ரசிகர்களுக்கு இருக்கு இருக்கும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக புதிய தகவலை அறிவித்துள்ளார் பிக்பாஸ்.

இப்போது உள்ளே இருக்கும் 8 போட்டியாளர்களும், எப்படியோ பிக்பாஸ் கொடுத்த டாஸ்கை செய்து தங்கள் கனவை எட்டி விடலாம் என பிளான் போட்ட நிலையில், அவர்களுடைய பிளானை சுக்கு நூறாக உடைப்பது போல் அமைந்துள்ளது இந்த அறிவிப்பு. இதுகுறித்து தீபக் படிக்கிறார். அதில் கூறி உள்ளதாவது, "உங்களுக்காக, வைல்ட் காட் நாக் அவுட் சுற்று. எக்ஸ் கண்டெஸ்டண்ட்ஸ் உங்களுடன் போட்டி போட சக போட்டியாளராக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வர உள்ளனர். இந்த போட்டியின் முடிவில் இரண்டு பேர் எக்ஸ் கண்டஸ்டென்சால் ரிப்ளை செய்ய படலாம். யார் யாரை நாக் அவுட் செய்யப் போகிறார்கள் பார்ப்போம். என உள்ளது. இதை கேட்டு சௌந்தர்யா ஐயோ என ஷாக் ரியாக்ஷன் கொடுக்க, ஜாக்குலின் என்னடா முதலில் இருந்தா என சலித்துக் கொண்டு பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து பேசும் முத்து, இருக்கும் மீதி 14 நாட்களில் நம்மால் முடிந்தவரை முழுவதையும் போட்டு விட்டோம் என்கிற நிம்மதியோடு வெளியே போக நல்ல வாய்ப்பு.  இறங்கி என்ன முடியுமோ செய்யணும் என கூறுகிறார். பழைய போட்டியாளர்கள் யார் யார் மீண்டும் உள்ளே வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, ஒருவேளை உள்ளே இருக்கும் போட்டியாளர்களை அவர்கள் தோக்கடித்தால் அவர்கள் ஃபைனலுக்குள் செல்லும் வாய்ப்பும், இப்போது உள்ளே இருக்கும் போட்டியாளர் வெளியே செல்ல வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!