சாப்பிடுறதுக்கு வேற இடமே கிடைக்கலயா... அந்தரத்தில் தொங்கியபடி விருந்து சாப்பிட்ட பிக்பாஸ் சிபி

Kanmani P   | Asianet News
Published : Feb 15, 2022, 04:37 PM IST
சாப்பிடுறதுக்கு வேற இடமே கிடைக்கலயா... அந்தரத்தில் தொங்கியபடி விருந்து சாப்பிட்ட பிக்பாஸ் சிபி

சுருக்கம்

கோவா சுற்றுலா சென்றுள்ள பிக்பாஸ் சிபி ..அங்கு அந்தரத்தில் விருந்துண்ணவும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்..

மாஸ்டர் படத்தில் விஜய்யின் மாணவனாக நடித்த சிபி புவனசந்திரன் கலந்துக் கொண்டுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த இவர் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்ததாகவும், பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து லண்டன் சென்று அங்கு நல்ல சம்பளத்தில் வேலை பார்த்ததாகவும் குறிப்பிட்டார். பின்னர் சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னை திரும்பிய சிபி, அதை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

கடந்த பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளராக கலந்து கொண்ட சிபி.. ரூ.12 லட்சம் பணத்துடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் கேபி மற்றும் கவின் ஆகியோர் ரூ.5 லட்சம் எடுத்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது சிபி அதனை முறியடித்து, அதிக பணத்துடன் வெளியேறினார். இதையடுத்து ராஜு முதல் இடத்தையும்,பிரியங்கா, பாவனி  முறையாக இரண்டாம் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிரபல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து கலக்கி வருகிறார் சிபி..இதற்கிடையே சூர்யாவுடன் ஒரு படத்தை நடித்து முடித்துள்ளதாக சிபி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்..அதோடு தனக்கு வாய்ப்பளித்த லோகேஷ் கனராஜுக்கும் அவர் நன்றிகளை தெரிவித்திருந்தார்..

இந்நிலையில் தனது நண்பர்களுடன் கோவாவிற்கு உல்லாச பயணம் சென்றுள்ள சிபி..அங்கு எடுத்துக்கொண்ட வீடியோக்களையும் ..போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார்..அந்த வகையில் சுற்றுலாவின் போது..அந்தரத்தில் உணவளிக்கும் இடத்திற்கு சென்றுள்ள அவர்கள்..அங்கு சேஃப்டி சாப்பிட அமர்ந்திருக்கும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.. 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!