
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், அனைத்து போட்டியாளர்களையும் தன்னுடைய வாயாலேயே மிரட்டி உருட்டி வருபவர் வனிதா. குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சிறிய பிரச்னையை கூட பெரிதாக்குவதில் இவருடைய பங்கு அதிகம் என்றே கூறலாம்.
அதே போல் வனிதா யார் சொல்வதையும் கேட்க மாட்டார். தான் சொல்லுவதை அனைவரும் கேட்க வேண்டும் என அவருடைய கருத்தை திணிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இவரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் தன்னுடைய மகன் ஸ்ரீஹரியை தந்தை விஜயகுமாரிடம் இருந்து பிரிப்பதற்காக நடு ரோட்டில் இவர் சண்டை போட்ட காட்சி வெளியாகியுள்ளது.
ஸ்ரீஹரி வனிதாவிடம் செல்ல மாட்டேன் என்று அழுது ஆடம் பிடித்த போதிலும், தன்னுடைய தந்தையிடம் இருந்து மகனை பிரிப்பதற்காக, குழந்தை என்றும் பாராமல் அவரின், கழுத்தை நெரித்து இழுக்கிறார். இதனால் குழந்தை கழுத்து இறுகுகிறது என போலீசார், குழந்தையை வனிதாவிடம் இருந்து பத்திரமாக மீட்டு, அவருடைய தாத்தாவிடம் பத்திரமாக ஒப்படைக்க ஓடி வரும் காட்சிகள் உள்ளது.
அந்த வீடியோ இதோ:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.