
பிரபல நடிகரும் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவருமான மகத், பிரபல மாடலும், இந்திய அழகியுமான, பிராய்ச்சி மிஸ்ராவை இந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.
வெகுவிமர்சியாக நடந்த இவர்களுடைய திருமணத்தில், நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். அந்த வகையில், இவர்களுடைய திருமணத்தில் பிரபல முன்னணி நடிகரும், மகத்தின் நீண்ட வருட தோழருமான நடிகர் சிம்பு கலந்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் பிராய்ச்சி - மகத்தின் திருமண நிச்சயதார்த்தம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் தான் நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடம் முழுமை நிறைவடைவதை கொண்டாடும் விதமாக, மகத் தன்னுடைய காதல் மனைவிக்கு, வெள்ளை நிற டி- ஷர்ட்டில், ‘Loving Quarantine Wife Life' என்று தன்னுடைய கைகளினாலேயே பெயிண்டிங் செய்து பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேலும் இந்த டி -சர்ட்டை அணிந்திருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள பிராய்ச்சி, ’ஒரு வருடம் முடிந்துவிட்டது.... இந்த ஒரு வருட வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமாக இருந்ததாகவு. நாங்கள் இப்போது வீட்டின் உள்ளேயே இருந்தாலும் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.