
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே, முகேன் கோல்டன் டிக்கெட் டாஸ்கில் வெற்றி பெற்று, முதல் பைனலிஸ்ட்டாக தேர்வானார். அவரை தொடர்ந்து கண்டிப்பாக பைனலிஸ்ட் இடத்தை பிடிப்பர் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட கவின் 5 லட்ச ரூபாயோடு வெளியேறியதால், இரண்டாவது பைனலிஸ்ட்டாக தேர்வாக உள்ளது தர்ஷனா அல்லது சாண்டியா என்கிற குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், இன்றைய முதல் புரோமோவிலேயே கவின் வெளியேறியதால் ஏவிக்ஷன் இல்லை என்று எதிர்பார்த்தால் அது தவறு. கண்டிப்பாக இன்றைய தினம் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பதை உறுதி செய்தார் கமல்.
அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், இன்று ஒருவர் வெளியேறுவது உறுதி. காப்பாற்ற படுபவர் பெயரை முதலில் சொல்லவா... அல்லது, வெளியேறுபவர் பெயரை முதலில் கூறவா என தனக்கு தானே பேசி கொள்ளும் கமல், சுவாரஸ்யம் கருதி முதலில் காப்பாற்ற படுபவர் பெயரை கூறுவதாக தெரிவிக்கிறார்.
இவரே அதிக வாக்குகளை பெற்ற செகண்ட் பைனலிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வேறு யாரும் இல்லை சாண்டி தான். இவர் காப்பாற்ற பட்டத்தை தொடர்ந்து இன்று வெளியேற உள்ளது யார் என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.