
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட மொழிகளிலும் அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர்.
இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 10 சீசன்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் துவங்கப்பட்டது.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் 23 ஆம் தேதி துவங்க உள்ளது. கடந்த இரண்டு சீசனை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமலஹாசன் தான் மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். ஆனால் தெலுங்கில் அப்படி இல்லை, முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
இரண்டாவது சீசனை தொகுத்து வழங்க அவரை அழைத்தபோது கால்ஷீட் பிரச்சினை காரணமாக வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டார். இதனால் இந்த வாய்ப்பு நடிகர் நானிக்கு சென்றது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என தெரியாமல் அவர் தடுமாறியதாக ரசிகர்கள் கருதினர்.
இதனால் பிக்பாஸ் மூன்றாவது சீசனை தெலுங்கில் யார் தொகுத்து வழங்க உள்ளனர் என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்த நிலையில், தற்போது இதற்கான பதில் ஆதாரத்தோடு வெளியாகியுள்ளது. இம்முறை பிக் பாஸ் தெலுங்கு சீசன் 3 நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். இவர் ப்ரோமோ ஷூட்டில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கேள்விக்கு பதில் கொடுத்து உள்ளது. இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சி தெலுங்கில் சற்று தாமதமாக துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.