
பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சி 15 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அனைத்து போட்டியாளர்களும் முதல் சீசனை மிஞ்சும் அளவிற்கு, சண்டை சச்சரவு என ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்து வருகிறார்கள்.
இவர்களில் ஹை லைட் என்றால், அது வனிதா தான் தனக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத விஷயத்தில் தலையிட்டு, சிறிய பிரச்னையை கூட பெரிதாக்க மிகவும் பாடு பட்டு வருகிறார். மேலும் இவர் எது சொன்னாலும் அதனை கேட்டு தலையாட்டுவதற்கு என்றே சிலர் உள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள வனிதா, மோகன் வைத்தியா, மதுமிதா, சரவணன், மற்றும் மீரா மிதுன் இவர்கள் ஐந்து பேரின், மோகன் வைத்தியா வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த வார தலைவர் பதவியில் இவர் பங்குபெற உள்ளதாக நேற்று பிக்பாஸ் அறிவித்துள்ளார்.
அதாவது, கடந்த இரண்டு தினங்களாக கொலைக்காரன் டாஸ்கில், சிறந்து விளங்கிய இரண்டு போட்டியாளர்களையும், சிறப்பாக விளையாடிய போட்டியாளர் ஒருவரையும் ஒருமனதாக தேர்வு செய்ய கூறினார். அப்போது அனைத்து போட்டியாளர்களும் வனிதா, மோகன் வைத்தியா மற்றும் சாக்ஷி ஆகியோர் பெயரை கூறினர்.
இதை தொடர்ந்து, இவர்கள் மூவரையும் பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவர் போட்டிக்கு போட்டியிடலாம் என அறிவித்துள்ளார்பிக்பாஸ். எனவே இந்த வாரம், மோகன் வைத்தியா மற்றும் வனிதா ஆகியோர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்க உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.