
பெங்களூரு மாடல் சனம் ஷெட்டி, பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்ற தர்ஷனின் காதலி ஆவர். 2012ம் ஆண்டு திரைக்கு வந்த அம்புலி படம் மூலம் தமிழில் அடியெடுத்துவைத்தார். பின்னர் 2016ம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை தட்டிச்சென்றார். ஆனாலும் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால், மாடலிங் துறையில் மட்டுமே அதிக கவனம் செலுத்திவருகிறார். அடிக்கடி சோசியல் மீடியாவில் தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கண் கூசும் அளவிற்கு சனம் ஷெட்டி வெளியிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம லைக்குகளை அள்ளி வருகிறது.
நீண்ட நாட்களாக வெள்ளித்திரையில் தோன்றாமல் இருந்த சனம் ஷெட்டி, எதிர்வினையாற்று என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ஆக்ஷன் படமான அதை, தயாரித்து, இயக்கியுள்ளார் அப்படத்தின் ஹீரோ அலெக்ஸ். அந்த ட்ரெய்லரில் ஹீரோவிற்கும், சனம் ஷெட்டிக்கும் இடையேயான லிப் லாக் சீன் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே அரைகுறை ஆடையில் சனம் ஷெட்டி போட்ட போட்டோஸைப் பார்த்த நெட்டிசன்கள் தர்ஷனிடம் கேள்வியாக கேட்டு கொன்று எடுத்தனர். இதனால் தர்ஷன் சனம் ஷெட்டி மீது செம்ம கடுப்பில் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படி ஹீரோவுடன் ஓவர் நெருக்கமாக நடித்துள்ள சனம் ஷெட்டி, லிப்லாக் சீன் வரை போய் இருப்பதை கண்ட தர்ஷன் ஆர்மி என்ன செய்ய காத்திருக்கிறதோ.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.