
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பல பிரபலங்களுக்கு அழைப்பு விடப்பட்டது. ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே 100 நாட்கள் உள்ளே இருக்க சம்மதித்தி இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் எதிர்த்தவர்கள் கூட பின் ரசிகர்கல்லாகி போனார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆரம்பத்தில் வாகை சூடவா, மௌன குரு போன்ற படங்கள் நடித்துள்ள மலையாள நடிகை இனியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
இது குறித்து அவர் பிரபல வார இதழுக்கு இனியா பேட்டி கொடுத்துள்ளார். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்களிடம் இருந்து தனக்கு 4 முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க கூறி டார்ச்சர் செய்ததாகவும். ஆனால் நான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் மவுசு கொஞ்சம் நாளைக்கு தான்.அப்புறம் மறைந்துபோகும் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.