பெண்களின் ஆடைகளில் கை வைக்காதீர்கள்..! கோபமான மும்தாஜ்…! நாரதர் வேலையை இனிதே ஆரம்பித்த பிக்பாஸ்…!

Asianet News Tamil  
Published : Jun 18, 2018, 02:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
பெண்களின் ஆடைகளில் கை வைக்காதீர்கள்..! கோபமான மும்தாஜ்…! நாரதர் வேலையை இனிதே ஆரம்பித்த பிக்பாஸ்…!

சுருக்கம்

big boss starts his game as usual

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றிலிருந்து சின்னத்திரையில் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. கமலஹாசன் துவக்கி வைத்து தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், பல முன்னாள் பிரபலங்களும், இன்னாள் பிரபலங்களும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இம்முறை கலந்து கொண்டிருப்பவர்களில் யார் ஜூலி?, யார் ஓவியா? என ஒரு பக்கம் விவாதம் போய்க்கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டினுள் நுழையும் போது எல்லோரும் சாதாரணமாக தான் இருக்கின்றனர். ஆனால் பிக் பாஸ் கொடுக்கும் ஒவ்வொரு டாஸ்க்கும் தான், அவர்களை ஜூலியாக, ஓவியாவாக, மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அந்த வகையில் தற்போது பிக் பாஸின் லேட்டஸ்ட் பிரமோ வெளியாகி இருக்கிறது. இதில் பிக் பாஸ் ஒரு புதிய டாஸ்கை கொடுத்திருக்கிறார். அந்த டாஸ்க்கின் படி வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும், மூன்று என்வலப்புகளை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். இதில் செண்ட்ராயன் பெண்கள் அறையில் என்வலப்பை தேடியபோது, மும்தாஜ் அவரிடம் பெண்களின் துணிகளை தொடாதீர்கள்...! என கோபமாக கூறுகிறார்.

செண்ட்ராயனும்  சக போட்டியாளர்களிடம், ” பிறகு எப்படி பொருளை தேட” என கேட்கிறார். இந்த சர்ச்சையால் கடுப்பான மும்தாஜ், பிக் பாஸிடம் புலம்புகிறார். இப்படி பிரச்சனையுடன் ஆரம்பித்திருக்கிறது  இந்த லேட்டஸ்ட் பிரமோ. இவ்வாறாக பிக் பாஸ் தன்னுடைய நாரதர் வேலையை இனிதே தொடங்கி விட்டார். இந்த பிக்பாஸ் நாரதரின் கலகம் தான் எங்கு முடியப்போகிறதோ? தெரியவில்லை...!  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pragya Nagra : அம்மாடியோ!! இம்புட்டு அழகா? மணக்கோலத்தில் நடிகை பிரக்யா நக்ரா.. கலக்கல் கிளிக்ஸ்!
பேபி கேர்ள் விமர்சனம்... நிவின் பாலி படம் மாஸ்டர் பீஸா? டம்மி பீஸா?