
பிக்பாஸ் மூன்றாவது எபிசோட் தற்போது விஜய் டிவியில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகையான மதுமிதா பங்கேற்றார். மக்களிடையே நல்ல ஆதரவு இருந்த நிலையில் மதுமிதா ஃபைனல்ஸ்க்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனை மற்றும் சக போட்டியாளர்கள் கொடுத்த மன உளைச்சலால் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப் படுத்தியதாக நசரத்பேட்டை காவல்நிலையத்தில் நடிகை மதுமிதா தபால் மூலம்புகார் அளித்துள்ளார்.
மேலும் சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதை நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன் கண்டிக்கவில்லை என்றும் மதுமிதா தபால் மூலம் அளித்த தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
தன்னை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி 56வது நாளில் வலுக்கட்டாயமாக போட்டியிலிருந்து வெளியேற்றியதாகவும் மதுமிதா தனது புகாரில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.