
பிகில் படம் பற்றி பிக்பாஸ் பிரபலம் போட்ட ட்வீட்... டிராமா குயினை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்... எதுக்கு இந்த பில்டப்பு...!
விஜய்யின் பிகில் படம் பற்றி பிக்பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார் போட்ட ட்வீட் நெட்டிசன்களை கொந்தளிக்க வைச்சிருக்கு.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ, கலாமேரி தம்பதியின் இரண்டு வயது மகன் சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இதோடு 38 மணி நேரத்திற்கும் மேலாகிறது. குழந்தையை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கியுள்ள நிலையில், சுஜித் நல்லபடியாக மீண்டு வரவேண்டுமென தமிழக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனையடுத்து #savesujith என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய வனிதா விஜயகுமார், பிகில் படம் பற்றி போட்ட டுவிட்டர் நெட்டிசன்களை ஆத்திரமடைய செய்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு குழந்தைகளுடன் பிகில் படம் பார்க்கச் சென்ற வனிதா,
கனத்த இதயத்துடன் பிகில் படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளுடன் தளபதி விஜய படத்தை பார்த்து தீபாவளியை கொண்டாட விரும்புகிறேன். சுஜித்தால் என் இதயம் நொறுங்குகிறது என பதிவிட்டுள்ளார். <
இந்தப் பதிவை பார்த்தவர்கள், எங்களுக்கு சுஜித் நல்லபடியாக வெளி வர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது, தியேட்டருக்கு போய் கனத்த இதயத்துடன் படம் பார்த்து என்ஜாய்ச் பண்ண தொணலை, எதற்காக தேவையில்லாத இந்த பில்டப் என வறுத்தெடுத்துக்கிட்டு இருக்காங்க. அதான் தியேட்டருக்கு போய் என்ஜாய் பண்றீங்க இல்ல, அப்புறம் எதுக்கு ஹெவி ஹாட்டுன்னு பில்டப் கொடுக்குறிங்கன்னு சகட்டு மேனிக்கு கமெண்ட்ஸ் வந்துக்கிட்டு இருக்கு. சினிமாவுக்கு போனமா வந்தோமன்னு இல்லாம, கனத்த இதயத்துடன் வனிதா போட்ட ட்வீட் இப்ப அவங்களுக்கு எதிராவே திரும்பிடுச்சி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.