அட எப்படி இவங்க மட்டும் எலிமினேட் ஆகவேயில்லை..எல்லா வாரமும் நாமினேட் ஆகும் பாவனி..யார் காப்பாற்றுவது தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Jan 05, 2022, 12:54 PM IST
அட எப்படி இவங்க மட்டும் எலிமினேட் ஆகவேயில்லை..எல்லா வாரமும் நாமினேட் ஆகும் பாவனி..யார் காப்பாற்றுவது தெரியுமா?

சுருக்கம்

பிக் பாஸ் வீட்டிலோ ஒவ்வொரு வாரமும்  பாவனி நாமினேட் செய்யப்படுகிறார். இருந்தும் இதுவரை அவர் வெளியேற்றப்படவில்லை..இதற்கு காரணமா பாவனி ஆர்மிதானாம்... அவர்கள் ஒவ்வொரு வாரமும் அதிக ஓட்டுக்கள் போட்டு பாவனியை காப்பாற்றி வருவதாக ரசிகர்கள் மார்த்தட்டி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 5-ல் ஒருவழியாக காதல் காட்சிகள் ஆரம்பமாகிவிட்டன. தற்போது வீட்டில் போட்டியாளர்களின் பிரியங்கா, தாமரை, பாவனி என 3 பெண் போட்டியாளர்கள் உள்ளனர். இவர்களில் பாவனி மீது ஆரம்பத்திலிருந்தே கணவரை இழந்தவர் என்கிற கரிசனத்தை ஆண் போட்டியாளர்கள் காட்டி வந்தனர். அதிலும் அபிநய் அதீத அன்பை பொலிந்து வந்தார். இது பாவனிக்கும் ஆறுதலை தந்தது. பின்னர் திடீரென அபிநய் தன்னை காதலிப்பது பிடிக்கவில்லை என பாவனி மற்ற ஹவுஸ்மேட்டிடம் கூறினார். 

இருந்தும் அபிநய் தனது நிலையில் இருந்து விலகுவதாக தெரியவில்லை. இது தொடர்பாக ஹவுஸ்மேட்ஸை தொடர்ந்து கமலும் கடந்த வாரம் கலாய்த்து விட்டார். பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பலி போட்டு கொண்டனர்.

இதற்கிடையே வைல்ட் கார்ட் என்ட்ரியில் வீட்டிற்குள் வந்த அமீர் கொஞ்ச நாட்களிலேயே  பாவனியை வசியம் செய்து விட்டார். ஏற்கனவே கடந்த வாரத்தில் ஒருவருக்கொருவர் மீதுள்ள ஈர்ப்பை இருவரும் வெளிப்படுத்தியிருந்தனர். பின்னர்  பாவனியை நெருங்கிய அமீர் ரகசியம் கூறுவது போல அருகில் சென்று பாவனியின் கன்னத்தில் குத்தமிட்டுள்ளார் பரபரப்பை கிளப்பினார்.

இவ்வாறு பிக் பாஸ் சீசன் 5-ல் முக்கிய சுவாரஸ்யமாக இருந்து வரும் பாவனிக்கு வெளியில் ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு...ஆனால் பிக் பாஸ் வீட்டிலோ ஒவ்வொரு வாரமும்  பாவனி நாமினேட் செய்யப்படுகிறார். இருந்தும் இதுவரை அவர் வெளியேற்றப்படவில்லை..இதற்கு காரணமா பாவனி ஆர்மிதானாம்... அவர்கள் ஒவ்வொரு வாரமும் அதிக ஓட்டுக்கள் போட்டு பாவனியை காப்பாற்றி வருவதாக ரசிகர்கள் மார்த்தட்டி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!