59 வயதிலும் யங் லுக்கில் ஸ்டைலிஷாக மாஸ் காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா!... ரசிகர்கள் ஆச்சரியம் - டிரெண்டிங்கில் ரூலர் டீசர்!

Published : Nov 22, 2019, 09:13 PM IST
59 வயதிலும் யங் லுக்கில் ஸ்டைலிஷாக மாஸ் காட்டியிருக்கும் பாலகிலருஷ்ணா!... ரசிகர்கள் ஆச்சரியம் - டிரெண்டிங்கில் ரூலர் டீசர்!

சுருக்கம்

பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், பிரபல தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ரூலர்'. இந்த படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக வேதிகா, சோனல் சௌகான் என டபுள் ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 

அவர்களுடன், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, பூமிகா சாவ்லா, சாயாஜி சிண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சிரன்டன் பட் இசையமைக்க, சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ரியலில் 59 வயதான பாலகிருஷ்ணா, ரூலருக்காக யங் லுக்கில் தோன்றுகிறார்.ஏற்கெனவே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'ரூலர்' படம், வரும் டிசம்பர் 20-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 'ரூலர்' படத்தின் டீசரும் தற்போது வெளியாகியுள்ளது. விதவிதமான கெட்டப்புகளில் ஆக்ஷன், ரொமான்ஸ், ஆட்டம் என பாலகிருஷ்ணா கலந்துகட்டி அடித்திருக்கும் இந்த டீசர், அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. குறிப்பாக, யங் லுக்கில் ஸ்டைலிஷாக மாஸ்காட்டியிருக்கும் பாலகிருஷ்ணாவை கண்டு ஆச்சரியமடைந்துள்ள ரசிகர்கள், டீசருக்கு லைக்ஸை அள்ளி வீசி வருகின்றனர். 

எதிர்பார்த்த மாதிரியே சமூக வலைதளங்களை அதகளப்படுத்திவரும் 'ரூலர்' டீசர், இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி அசத்தி வருகிறது. அத்துடன், யூ-டியூப்பில் வெளியான 2 மணிநேரத்திலேயே ஒரு மில்லியன் வியூசை கடந்து சாதனை படைத்துள்ளது. 

'ரூலர்' டீசருக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் படக்குழு, அடுத்து படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்