16 வருடங்களுக்குப் பிறகு இந்தியில் ரீ மேக் ஆகும் ‘பிதாமகன்’ படத்தை இயக்குகிறாரா பாலா?...

By Muthurama LingamFirst Published Feb 21, 2019, 4:06 PM IST
Highlights


‘வர்மா’ படப் பஞ்சாயத்தால் இயக்குநர் பாலாவும் நடிகர் விக்ரமும் ஏழெட்டு தேசிய விருதுகள் வாங்கியதற்கு இணையாக இந்திய அளவில் புகழ் பெற்றிருப்பதால் இவர்களது காம்பினேஷனில் 16 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘பிதாமகன்’ மிக விரைவில் இந்தியில் ரீ மேக் ஆகவிருக்கிறது. 

‘வர்மா’ படப் பஞ்சாயத்தால் இயக்குநர் பாலாவும் நடிகர் விக்ரமும் ஏழெட்டு தேசிய விருதுகள் வாங்கியதற்கு இணையாக இந்திய அளவில் புகழ் பெற்றிருப்பதால் இவர்களது காம்பினேஷனில் 16 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘பிதாமகன்’ மிக விரைவில் இந்தியில் ரீ மேக் ஆகவிருக்கிறது. ஆனால் இப்படத்தை பாலா இயக்கவில்லை.

‘பிதாமகன்’ 2003ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘நந்தவனத்திலோர் ஆண்டி’ என்ற சிறுகதையின் ஒரு வரியைக் கதைக்கருவாக எடுத்துக்கொண்டு பாலா இயக்கியிருந்த அந்தப் படம் பாக்ஸ் ஆபிசில் சூப்பர் ஹிட்டடித்தது. இளையராஜாவின் ‘இளங்காத்து வீசிய’ இப்படத்துக்காக விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற, இதில் நடித்த சூர்யா,லைலா, சங்கீதா தொடங்கி கருணாஸ் வரை அடுத்த கட்டத்துக்குப் போனார்கள்.

பாலாவின் ’சேது’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கி சல்மான் கானை வைத்து ‘தேரே நாம்’ என்ற பெயரில் ரீ மேக் செய்த காமெடி நடிகர்,இயக்குநர்  சதீஷ் கவுசிக்தான் ‘பிதாமகன்’ இந்தி ரைட்ஸையும் வாங்கியிருந்தார். ‘சேது’வை சுடச்சுட ரீமேக் செய்த சதீஷ் கவுசிக் ஏனோ பிதாமகனை கிடப்பில் போட்டுவைத்திருந்தார்.

ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீர் ஞானோதயமாக பிதாமகனை மிக விரைவில் ரீமேக் செய்யவிருப்பதாகவும் தான் பிசியாக இருப்பதால் எதாவது ஒரு புதுமுக இயக்குநரை படத்துக்கு நியமிக்க இருப்பதாகவும் வட இந்திய இணையதளங்களில் பேட்டி அளித்துள்ளார். அவரது இச்செய்தியை ஒட்டி பாலாதான் இந்தி ரீமேக்கை இயக்குகிறார் என்று வரும் செய்திகளில் உண்மை இல்லை.

click me!