
பிக்பாஸ் வீட்டில் தற்போது ஃபினாலே டாஸ்க் நடந்து வருகிறது. நேற்று இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில் இன்றைய முதல் புரமோ மூன்றாவது சுற்று நடைபெற்றதையும், அதில் கேபி வேறு லெவலுக்கு விளையாடி பாலாஜியை வெறுப்பேற்றியதையும் பார்த்தோம்.
இதை தொடர்ந்து வெளியாகியுள்ள நான்காவது புரோமோவில்... ஏற்கனவே காண்டாக இருக்கும் பாலாஜியை வெறுப்பேற்றும் விதத்தில் ஆரி விளையாடுகிறார். இது குறித்த புரோமோ தான் தாற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் ஒலி எழுப்பியதும் ஷிவானியிடம் இருந்து எடுத்து எதையோ எடுத்து செல்வது தான் டாஸ்க் என தெரிகிறது. ஆரி ஓடி சென்று எடுத்ததும், பாலாஜி ஓடி வருவது தான் உங்கள் ஸ்டேட்டர்ஜி என்றால் எனக்கும் ஸ்டேட்டர்ஜி தெரியும் என்று அவர் வரும் பாதையில் இரண்டு மர பொருட்களை போடுகிறார்.
இப்படி விளையாடுகிறாய் தடுக்கி கீழே விழுந்தால் என்ன ஆவது என பாலாஜியிடம் ஆரி கேட்க, அதற்க்கு பாலாஜி அப்படி என்றால் ஓடாதீர்கள் என கூறுகிறார். இதற்க்கு ஆரி நீ ஆம்பள பையன் தானே ஓடி வந்து பிடி என சொல்கிறார். இதற்கு பதில்கொடுக்கும் பாலாஜி... உங்களுக்கு புத்திசாலித்தனம் இருக்கு, எனக்கு பலம் தான் இருக்கு என கூறி, நான் நன்றாக தான் விளையாடுகிறேன் என கூறுகிறார். பாலாஜியை வெறுப்பேற்றுவது போல்.. நீ நல்ல தான் விளையாடுகிறாய் என ஆரி கூறும் காட்சிகள் தற்போதைய புரோமோவில் இடம்பெற்றுள்ளது.
இன்றைய இரண்டாவது புரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.