
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் பாகுபலி 2 திரைப்படம் இந்தியாவில் தொடங்கி அமெரிக்கா வரை பாக்ஸ்ஆபிஸில் கலக்கி வருகிறது.
ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டிய முதல் இந்திய படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது பாகுபலி.
இந்த படம் பற்றி தினம்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. ராணாவுக்கு ஒரு கண் தெரியாது தொடங்கி பிரபாஸ் பணக்கஷ்டத்தில் இருந்தார் என்பது வரை பல செய்திகளை பார்த்தோம்.
தற்போது பாகுபலி படத்தில் சில நிமிடங்களே வந்த குழந்தை பற்றி ஒரு சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.
பிறந்து 18 நாட்களே ஆன 'அக்ஷிதா வல்சலான்' என்ற பெண் குழந்தையை தான் ரம்யா கிருஷ்ணன் கையில் கொடுத்து நடிக்கவைத்துள்ளனர்.
ரம்யா கிருஷ்ணன் குழந்தை தூக்கிப்பிடித்து தண்ணீரில் இருக்கும் காட்சி கேரளாவில் படமாக்கப்பட்டது. படக்குழுவில் பணியாற்றிய ஒருவரின் குழந்தை தான் இந்த 'அக்ஷிதா வல்சலான்' என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.