’பக்ரீத்’ படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் - ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த விஷால் மேனேஜர்...

Published : Aug 24, 2019, 09:30 AM IST
’பக்ரீத்’ படத்தின் டீசர், பாடல்கள் முடக்கம் - ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த விஷால் மேனேஜர்...

சுருக்கம்

குறிப்பிட்ட காரணங்கள் எதுவுமின்றி தனது படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர்களை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளதாகவும் அதனால் தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் விஷாலின் மேனேஜரும் ‘பக்ரீத்’படத் தயாரிப்பாளருமான எல்.முருகராஜ் கொந்தளித்துள்ளார்.

குறிப்பிட்ட காரணங்கள் எதுவுமின்றி தனது படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர்களை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளதாகவும் அதனால் தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் விஷாலின் மேனேஜரும் ‘பக்ரீத்’படத் தயாரிப்பாளருமான எல்.முருகராஜ் கொந்தளித்துள்ளார்.

விக்ராந்த நடிப்பில் நேற்று வெள்ளியன்று  வெளியாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் இவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். ஜெகதீசன் சுபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை எம்10 புரொடக்‌ஷன்ஸ் சார்பாக எல்.முருகராஜ் தயாரித்திருக்கிறார்.மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், யூடியூப்பில் பக்ரீத் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் திடீரென  முடக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து தயாரிப்பாளர் முருகராஜ் கூறும்போது, ‘ஸ்டார் மியூசிக் நிறுவனத்திடம் பக்ரீத் படத்தின் டீசர், பாடல்களை வெளியிடும் உரிமையை கொடுத்திருக்கிறேன். படம் வெளியாகும் நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் இதன் டீசர் மற்றும் பாடல்கள் ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) முடக்கியது. என்ன காரணம் என்று அவர்களிடம் தொடர்பு கொண்டால், தவறுதலாக அப்படி ஆகிவிட்டது என்று சாதாரணமாக கூறிவிட்டார்கள்.

என்னுடைய படத்தின் பாடல்கள் மற்றும் டீஸரை ஏறக்குறைய 20 மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி இருக்கிறார்கள். இதனால் எனக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டிஸும் அனுப்பி இருக்கிறேன். பக்ரீத் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஸ்டார் இந்தியா நிறுவனத்தால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்’ என்றார்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உணவூட்டும் விவசாயத்திற்கு உயிர்யூட்டும் நந்தகுமார்; மண்ணைக் காக்க வந்த மாமனிதனின் சாதனைகள்!
டான்ஸில் தெறிக்க விட்ட தளபதி விஜய் – பாடலில் பட்டைய கிளப்பும் ஸ்டெப்ஸ்; இனி ஒரு பய கமெண்ட் பண்ண முடியாது!