தொலைக்காட்சி தொடராகும் பிரமாண்ட 'பாகுபலி'!!!

 
Published : May 03, 2017, 02:09 PM ISTUpdated : Sep 19, 2018, 03:14 AM IST
 தொலைக்காட்சி தொடராகும் பிரமாண்ட 'பாகுபலி'!!!

சுருக்கம்

baahubali is becoming a tv serial

தென்னிந்திய சினிமாவின் பிரமாண்ட படைப்பான 'பாகுபலி' படத்தின் கதாபாத்திர பின்புல கதைகளைத் திரித்து தொலைக்காட்சி தொடர்களாக உருவாக்க பாகுபலி பட கதைக்குழு  திட்டமிட்டுள்ளது.

இந்திய சினிமாவில்  பெரும் பொருட்ச்செலவில் பிரமாண்டமான படைப்பான பாகுபலி 2 , கடந்த மாதம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியானது. வர்த்தக ரீதியாகவும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றதோடு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் இப்படம் வெளியான நாட்களிலிருந்து பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 

'பாகுபலி 2' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் SS ராஜமெளலி, 'படத்தின் கதை இரண்டாம் பாகத்தோடு முடிந்துவிடும். ஆனால், 'பாகுபலி' உலகம் தொலைக்காட்சி தொடர்கள், புத்தக வடிவில் தொடரும். அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் உள்ள பின்புல கதைகள் இடம்பெறும்' என்று தெரிவித்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பின்புல கதைகள் அனைத்தும் புத்தகமாக வெளிவரவுள்ளது.

இந்நிலையில், வரும் 2018-ம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 'பாகுபலி' படத்தின் தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பைத் தொடக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதன் படப்பிடிப்பை 'பாகுபலி' படத்துக்காக அமைக்கப்பட்ட செட்டில் நடத்த முடிவெடுத்துள்ளார்கள். இதில் நடிக்கவிருப்பவர்களுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையும் படமாகவே கருதி, பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!
நடிகை நிதி அகர்வால் மீது கைவச்சது யார்? அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்