
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த 28ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸானது.
இந்நிலையில் பாகுபலி 2 படம் சரித்திரம் படைத்துள்ளது. இப்படம் வெளியான வெறும் பத்தே நாட்களில் ரூ.1000 கோடி வசூல் செய்து திரையுலகில் புதிய சரித்திரம் படைத்துள்ளது. ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை இப்படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த சாதனையை முறியடிக்க நிச்சயம் பல ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. உலக சினிமா இந்திய சினிமாவை வியந்து திரும்பிப் பார்க்கவைத்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பாக்ஸ் ஆபீஸில் மிரட்டி வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் முந்தைய வசூல் சாதனையை சாய்த்து விட்டு சரித்திரம் படைத்துள்ள பாகுபலி 2 படக்குழுவுக்கு உலகமெங்கிலுமிருந்து பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இப்படம் இந்திய சினிமாவுக்கு பேர் வாங்கி தந்தது மட்டுமல்லாமல், யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வசூலையும் குவித்துள்ளது. இது மட்டுமல்ல பாகுபலி 2 படத்தின் உலகம் முழுவதும் 10 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியா
Nett : ரூ. 675 கோடி
Gross : ரூ. 860 கோடி
உலகம்
Gross: ரூ 200 கோடி
மொத்தம்; ரூ 1,060 கோடி
பாகுபலி 2 வின் இந்த வசூல் நிச்சயம் வெகு விரைவில் தகர்க்கக் கூடிய சாதனை அல்ல. ஒரு தென்னிந்திய மொழிப்பாடம் இவ்வளவு வசூலை அள்ளியதால் உச்சகட்ட கடுப்பில் இருக்கும் கஜினி நாயகன் கான் கடந்த ஆண்டு வெளியான தங்கள் படத்தை மறுபடியும் வெளியிட்டு பாகுபலியை முந்த நினைத்துள்ளார்.
ஆனால் பப்பு வேகாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்தியாவின் வசூல் சக்கரவர்த்திகள் நாங்கள் தான் என பெருமையாக பீத்திக்கொள்ளும் 'கான்'கள் மூலையில் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.