'அயன்' பட சண்டை காட்சியில் கெத்து காட்டிய இளசுகள்..! நடிகர் சூர்யா பாராட்டு..!

Published : Jul 26, 2021, 07:01 PM IST
'அயன்' பட சண்டை காட்சியில் கெத்து காட்டிய இளசுகள்..! நடிகர் சூர்யா பாராட்டு..!

சுருக்கம்

'அயன்' பட சண்டை காட்சியை, இளசுகள் சிலர் தத்ரூபமாக எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் செல் போனிலேயே, வீடியோ எடுத்து அதனை எடிட் செய்து யூ-டியூபில் வெளியிட்டதை பார்த்த நடிகர் சூர்யா, ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை டேக் செய்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  

'அயன்' பட சண்டை காட்சியை, இளசுகள் சிலர் தத்ரூபமாக எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் செல் போனிலேயே, வீடியோ எடுத்து அதனை எடிட் செய்து யூ-டியூபில் வெளியிட்டதை பார்த்த நடிகர் சூர்யா, ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை டேக் செய்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று, 'அயன்'. 2009 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி இருந்தார். சூர்யாவின் சார்மிங் நடிப்பு, ஆக்ஷன், காதல், அழுகை, நண்பருக்கான பாச போராட்டம் என, அனைத்தும் கலந்த அம்சமாக இப்படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் நடிகை தமன்னா சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பொன்வண்ணன் , பிரபு, கருணாஸ், ஜெகன், ஆகாஷ் தீப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் போன்ற பொருட்களை கடத்தி வருவார். ஒரு சீனில் வெளிநாட்டில் சூர்யாவிடம் இருந்து வைரத்தை கடத்தி செல்ல முயலும் போது அவர்களை சூர்யா துரத்தி, துரத்தி சந்து பொந்தில் எல்லாம் ஓடி ரௌடிகளை வெளுத்து வாங்குவார். இதே காட்சியை சில சிறுவர்கள் எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் தத்ரூபமாக நடித்து அசத்தியுள்ளார்.

இந்த காட்சி சூர்யா கண்ணில் பட, அவர் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து... பாதுகாப்புடன் மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது இந்த காட்சி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் சமீப காலமாகவே திரைப்படம் மேல் ஈர்ப்பு உள்ள இளசுகள் இது போன்ற ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி வருவதையும் பார்க்க முடிகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa