உலக கோப்பை 2019 கணிப்பு ; ஜோதிடர் பாலாஜி ஹாசனை மாதவன் பாராட்டுறாக,ஹர்பஜன் சிங் பாராட்டுறாக...

Published : Jul 16, 2019, 10:06 AM IST
உலக கோப்பை 2019 கணிப்பு ; ஜோதிடர் பாலாஜி ஹாசனை மாதவன் பாராட்டுறாக,ஹர்பஜன் சிங் பாராட்டுறாக...

சுருக்கம்

நடிகர்கள் அஜீத்தும் விஜயும் அரசியலுக்கு வரமாட்டார்கள். சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவார். ஆனால் மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்று அதிரடி ஜோதிடம் சொல்லிவரும் பாலாஜி ஹாசன் உலகக்கோப்பை குறித்த சரியான கணிப்புகளுக்காக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.

நடிகர்கள் அஜீத்தும் விஜயும் அரசியலுக்கு வரமாட்டார்கள். சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவார். ஆனால் மக்கள் அவருக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்று அதிரடி ஜோதிடம் சொல்லிவரும் பாலாஜி ஹாசன் உலகக்கோப்பை குறித்த சரியான கணிப்புகளுக்காக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளார்.

நடந்து முடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்ற செய்திக்கு நிகராக பேசப்பட்டு வரும் இன்னொரு செய்தி சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசனின் உலகக்கோப்பை குறித்த கணிப்பு. அகில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பல பரிசுகளையும் பட்டங்களையும்  பெற்றுள்ள இவர் இந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்தியா மோதும்.. அதேசமயம் தோற்க நேரிடும் என்றும் கடந்த ஜனவரி -1ஆம் தேதியே தனது கணிப்பை வெளியிட்டிருந்தார்.. 

மேலும்  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் தான் செமி பைனலுக்கு தகுதி பெறும் என்றும், இந்த 2019 ஆண்டு உலகக்கோப்பையை இதுவரை உலகக்கோப்பையை ஜெயிக்காத புதிய அணியே வெல்லும் எனவும் சொல்லி இருந்தார் .இந்த தொடரில் மேன் ஆப் தி சீரிஸ்  நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தான் என அவர் ஆணித்தரமாக சொன்னதும் பலித்துள்ளது. அதனால் சமீபத்திய ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளார் பாலாஜி ஹாசன்.

அதேபோல இறுதிப்போட்டியில் நியூசிலாந்து கோப்பையை கைப்பற்றும் என்றும் கூறியிருந்தார்.. கிட்டத்தட்ட இவரது கணிப்புக்கு மிக நெருக்கத்தில் வந்த வெற்றி கடைசி நேரத்தில் தான் நூலிழையில் கைமாறி போயிருக்கிறது. அதுமட்டுமல்ல கடந்த ஒரு வருட காலமாக பல விஷயங்களில் இவர் கூறிய கணிப்புகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.. பெரும்பாலான கணிப்புகள் அப்படியே பலித்துள்ளன., ஆர்யாவுக்கு இந்த வருடம் திருமணம் ஆகும் என சொன்னது, விஷால் வரலட்சுமியை திருமணம் செய்ய மாட்டார் என சொன்னது, ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் இணைவார்கள் என சொன்னது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை தோற்கடித்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என சொன்னது, மோடிதான் மீண்டும் பிரதமர் ஆவார் என சொன்னது என அனைத்துமே நூறு சதவீதம் அப்படியே பலித்துள்ளதால் யாருய்யா இந்த பாலாஜி ஹாசன் என உலகமே கிறுகிறுத்து போய் கிடக்கிறது.

இவரது துல்லியமான கணிப்புகளை கண்டு நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்,  நடிகை ஷில்பா ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவர்களும் கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் மோகன்,  பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் வாசிம் அக்ரம் உள்ளிட்ட பலர் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜெட் வேகத்தில் நடந்து முடிந்த ஷூட்டிங்: திரையரங்கு ரேஸில் இடம் பிடிக்கும் D54 படம்!
அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!