அந்த 10 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நடிகர் ஆர்யாவின் திருமணம் என்னும் நிக்காஹ்...

Published : Feb 24, 2019, 02:29 PM IST
அந்த 10 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நடிகர் ஆர்யாவின் திருமணம் என்னும் நிக்காஹ்...

சுருக்கம்

'பொண்ணு வீட்டுல பயங்கர எதிர்ப்பாம். அதனால ஆர்யா கல்யாணத்துல... என்று யாரும் இனிமேல் குழப்பமுடியாதபடி ஆர்யா-சாயிஷா திருமண அழைப்பிதழ் அச்சாகி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்திருமணம் ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 10ம் தேதியன்று இஸ்லாமிய வழக்கப்படி நடைபெறுகிறது.

'பொண்ணு வீட்டுல பயங்கர எதிர்ப்பாம். அதனால ஆர்யா கல்யாணத்துல... என்று யாரும் இனிமேல் குழப்பமுடியாதபடி ஆர்யா-சாயிஷா திருமண அழைப்பிதழ் அச்சாகி விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்திருமணம் ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் 10ம் தேதியன்று இஸ்லாமிய வழக்கப்படி நடைபெறுகிறது.

ஜம்சத் என்கிற இயற்பெயரைக் கொண்டவர் ஆர்யா. 2005 ஆம் ஆண்டு’அறிந்தும் அறியாமலும்’, ‘உள்ளம் கேட்குமே’ ஆகிய இரு படங்களின் மூலம் ஒரே நேரத்தில்  அறிமுகமானார். ஒரு சில படங்களிலேயே மக்களுக்கு நன்கு அறிமுகமாகிவிட்டார். அவர் நடித்த படங்கள் ஓடுகிறதோ இல்லையோ தொடர்ந்து படங்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கிறது.

இளம்பெண்களுக்குப் பிடித்த நடிகர் என்பது அவருக்குப் பலம். திரையுலகிலும் பல நடிகைகளுடன் அவர் நட்பாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது. கொஞ்ச காலம் நயன்தாராவின் காதலர் என்றும் சொல்லப்பட்டவர். அடுத்து சில மாதங்கள் அமலா பால், பின்னர் அனுஷ்கா ஆகியோருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அவையெல்லாம் வெறும் வதந்திகள் என்றாகிப்போயின.

தற்போது அவருக்கு வயது நாற்பதை நெருங்கிவிட்ட நிலையில் இனியும் தீராத விளையாட்டுப்பிள்ளையாக இருக்கமுடியாது என்பதால், இப்போது உண்மையிலேயே அவர் காதலில் விழுந்து அது திருமணம் வரை வந்திருக்கிறது. மணப்பெண் சாயிஷா ஆர்யாவுடன் ‘கஜினிகாந்த்’ படத்தில் இணைந்து நடித்தவர். துவக்கதில் பெண் வீட்டார் தரப்பில் கொஞ்சம் எதிர்ப்பு இருந்ததாகவும், அதைப் பிடிவாதம் பிடித்து சாயிஷா அடித்து நொறுக்கியதாகவும் தகவல்.

இந்த நிக்காஹ் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்தாலும் வெறுமனே 100 பத்திரிக்கைகள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளதாம். திரையுலகில் சுமார் 10 முதல் 15 பேருக்கு மட்டுமே ஆர்யா அழைப்பு விடுத்திருக்கிறாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!