
தளபதி விஜய் என்ற புதிய பட்டத்துடன் மூன்று வேடங்களில் மெர்சலாக மூன்று நாயகியர், இரண்டு மிரட்டலான வில்லன்கள், ஆஸ்கர் நாயகனின் இசை என பிரமாண்டத்துடன் தீபாவளி விருந்தாக களம் காணுகிறார் மெர்சல் அரசன் விஜய்.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைப் பிளக்கும் என டீசர் வெளியாவதற்கு முன்பாகவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டே காட்டிக்கொடுத்தது.
இதனையடுத்து சமீபத்தில் வெளியான மெர்சல் டீசர் பல லட்சம் லைக்ஸுகளை பெற்று 21 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்தத் தகவலை தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட யு-டியூப் நிறுவனம், "Epic Thalabathi" என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு தமிழ் டீசர் பெற்றுள்ள இவ்வளவு பெரிய வரவேற்பைக் கண்ட நார்த் இந்தியா கான்கள் கடுப்பில் உள்ளார்களாம்.
அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே அதிக லைக்குகளைப்பெற்ற கபாலி, விவேகம் பட டீசர்கள் பெற்ற சாதனைகளை மெர்சல் முறியடித்தது. பின்னர் உலக அளவில் அதிக லைக்ஸ்களை பெற்ற டீசர் என்ற உலக சாதனையையும் படைத்தது.
இந்நிலையில் இந்த டீசர் 20 மில்லியன் பார்வையாளர்கள், அதாவது 2 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதன் மூலம் குறைந்த நாட்களில் 2 கோடி பார்வையாளர்களைப் பெற்ற இந்தியப் படத்தின் டீசர் என்ற சாதனையைப் படைத்துள்ள மெர்சல் டீசரின் சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மெர்சல் டீசர் 2.10 கோடி பார்வையாளர்களைக் கடந்த இந்த சரித்திர சாதனையை முன்னிட்டு, சென்னை R.K.நகர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதே போல தமிழகம் முழுவதும் போஸ்டர், பேனர் என படம் வெளியாவதற்கு முன்பே மெர்சல் அரசனை கொண்டாடத் தயாராகி விட்டனர் தளபதி ரசிகர்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.